LOADING...
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையைக் குறைத்துள்ளது ஏத்தர், இப்போ என்ன விலையில் வாங்கலாம்?
ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையைக் குறைத்துள்ளது ஏத்தர், இப்போ என்ன விலையில் வாங்கலாம்?

எழுதியவர் Prasanna
Mar 11, 2026
06:21 pm

செய்தி முன்னோட்டம்

மார்ச் மாதத்திற்கான சலுகையாக இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் விலைகளை மட்டும் குறைத்துள்ளது ஏத்தர் எனர்ஜி. பெங்களூருவைச் சேர்ந்த இந்த நிறுவனம் இந்தியாவில் ரிஸ்டா S மற்றும் 450 சீரிஸ் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இவற்றில் ரிஸ்டா மற்றும் 450S ஆகிய ஸ்கூட்டர் மாடல்களின் விலைகளை மட்டும் கணிசமான அளவு குறைத்துள்ளது. இந்த குறைவான விலையானது மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஏத்தர் எனர்ஜி

எவ்வளவு விலை குறைக்கப்பட்டிருக்கிறது?

ரிஸ்டா S மாடலில் விலையை ரூ.10,000 வரை குறைத்திருக்கிறது ஏத்தர் எனர்ஜி. இந்த மாடலை ரூ.1.05 லட்சம் என்ற விலையில் இந்த மாதம் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். அதேபோல், 450S மாடலின் விலையை ரூ.7,000 வரை குறைத்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ரூ.1.13 லட்சம் என்ற விலையில் நாம் வாங்கலாம். இந்த இரண்டு மாடல்களைத் தவிர்த்து மற்ற மாடல்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

Advertisement