Page Loader
Ampere Primus v/s Ola S1: எது சிறந்த தேர்வாக இருக்கும்?
Ampere Primus v/s Ola S1 இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வேறுபாடு

Ampere Primus v/s Ola S1: எது சிறந்த தேர்வாக இருக்கும்?

எழுதியவர் Siranjeevi
Feb 20, 2023
01:42 pm

செய்தி முன்னோட்டம்

க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டியின் ஒன்றான ஆம்பியர் பிரைமஸ் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் களமிறக்கியுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஓலா S1 போட்டியாக இருக்கும் எனக்கூறப்பட்டது. இரு ஸ்கூட்டர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை பற்றி பார்ப்போம். ஆம்பியர் பிரைமஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாக 1 லட்சத்து 9 ஆயிரத்து 900 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆம்பியர் ஸ்கூட்டர் ஓர் முழு சார்ஜில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 77 கிமீ ஆகும். மேலும், இவை 5 செகண்டில் பூஜ்ஜியத்தில் இருந்து 40 கிமீ வேகத்தை எட்டுவிடும், ப்ளூடூத் இணைப்பு, நேவிகேஷன், செல்போன் இணைப்பு வசதி உள்ளது.

Ampere Primus v/s Ola S1

Ampere Primus v/s Ola S1 - வேறுபாடுகள் என்னென்ன?

நான்கு விதமான நிற தேர்வுகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்க இருப்பதாக ஆம்பியர் உள்ளது. ஓலா S1 ஸ்கூட்டரில் ஆனது 3kWh பேட்டரி பேக்குடன் இணைக்கப்பட்ட 8.5kW மின்சார மோட்டாரிலிருந்து சக்தியைப் பெறுகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 141 கிமீ தூரம் வரை செல்லும் என்று உறுதியளிக்கிறது. ஓலா S1 முன் மற்றும் பின் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகளைக் கொண்டுள்ளது. இரண்டு ஸ்கூட்டர்களிலும் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் (CBS) பொருத்தப்பட்டுள்ளது. எனவே, Ola S1 ஆனது எதிர்காலத் தோற்றம், சக்திவாய்ந்த மின்சார மோட்டார், நீண்ட தூரம் மற்றும் சிபிஎஸ் உடன் கூடிய டிஸ்க் பிரேக்குகள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், சிறந்த பிரேக்கிங் செயல்திறனுக்காக, சற்று குறைந்த விலையில் அதிக அர்த்தமுள்ளதாக உள்ளது.