ரூ 1.10 லட்சத்திற்கு அறிமுகமானது ஆம்பியர் நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
செய்தி முன்னோட்டம்
க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டியின் இரு சக்கர வாகன பிராண்டான ஆம்பியர், அதன் முதல் பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆம்பியர் நெக்ஸஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ1.10 லட்சமாகும். இது ரூ.1.20 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகிறது(எக்ஸ்-ஷோரூம்).
நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு பதிப்புகளில் கிடைக்கிறது.
அடிப்படை EX மாடல் மற்றும் டாப்-ஆஃப்-லைன் ST மாடல் ஆகியவை அதன் இரண்டு பாதிப்புகளாகும்.
ஜான்ஸ்கர் அக்வா, சந்திர வெள்ளை, இந்திய சிவப்பு மற்றும் ஸ்டீல் சாம்பல் ஆகிய நிறங்களில் இந்த புதிய ஸ்கூட்டர் கிடைக்கிறது.
ஆம்பியர் நெக்ஸஸ்
நெக்ஸஸ் ஸ்கூட்டர் அம்சங்கள்
நெக்ஸஸ் ப்ரைமஸுக்குப் பதிலாக க்ரீவ்ஸின் முதன்மையான மின்சார ஸ்கூட்டராக மாற்றப்பட்டுள்ளது.
இருப்பினும், மின்சார இயக்கம் ஊக்குவிப்பு திட்டத்தின் (EMPS) கீழ் மத்திய மானியங்களுக்கு இது தகுதி பெறாது.
அறிமுகச் சலுகைக்குப் பிறகு, இதன் விலை ரூ 10,000 அதிகரிக்கும்.
மே மாத இறுதியில் இதன் டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான முன்பதிவு ஆர்டர்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
இந்த ஸ்கூட்டர் NXG கான்செப்ட்டில் இருந்து சில வடிவமைப்பு கூறுகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் ஒற்றை-பக்க ஸ்விங் ஆர்ம் போன்ற சில அழுகுபடுத்தும் அம்சங்கள் இதில் கிடையாது.