பெலினோ ஹேட்பேக்கில் கூடுதல் வசதிகளை கூடுதல் கட்டணத்தில் வழங்கும் மாருதி சுஸூகி
இந்தியாவில் நாளுக்கு நாள் ஆட்டோமொபைல் பாதுகாப்பு தரநிலை மத்திய அரசால் உயர்த்தப்பட்டுக் கொண்டே வருகிறது. எனவே, அதற்கேற்ப ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்கள் வாகனங்களின் பாதுகாப்புத் தரநிலையை உயர்த்தி வருகின்றன. தற்போது மாருதி சூஸூகி நிறுவனம், தங்களுடைய பெலினோ ஹேட்ச்பேக் மாடலின் அடிப்படையான 'சிக்மா' வேரியன்டிற்கு சில கூடுதல் பாதுகாப்பு மற்றும் டிசனை அம்சங்களை வழங்க வருகிறது. ஆனால், இது ஸ்டான்ர்டாக வழங்கப்படுவதில்ல, கூடுதல் கட்டணத்துடன் மட்டுமே வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதன் படி சிக்மா வேரியன்டில், கூடுதல் கட்டணத்தில் பின்பக்க இருக்கையில் நடுவில் அமர்ந்து பயணிப்பவர்களுக்கு 3 பாய்ண்ட் சீட்பெல்ட் மற்றும் கூடுதல் ஹெட்ரெஸ்டை வழங்கத் தொடங்கியிருக்கிறது மாருதி சுஸூகி.
மாருதி சுஸூகி பெலினோ சிக்மா வேரின்டில் வேறென்ன அம்சங்களைக் கூடுதல் கட்டணத்தில் பெற முடியும்?
பெலினோ சிக்மா வேரியன்டில், கூடுதல் கட்டணத்தில், சில்வர் வீல் கவர், க்ரோம் டோர் ஹேண்டில், விண்டோ வைசர், லோவர் பூட் க்ரோம் கார்னிஷ் மற்றும் மிரர் கேப்கள் வழங்கப்படுகின்றன. இந்த கூடுதல் வசதிகளானது, பெலினோ ஹேட்ச்பேக்கிற்கு சற்று ப்ரீமியமான லுக்கைக் கொடுக்கிறது. பெலினோ சிக்மா வேரியன்டில் 89hp பவர் மற்றும் 113Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைக் கொடுத்திருக்கிறது மாருதி. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும் பெலினோவின் சிக்மா வேரியன்டானது, இந்தியாவில் ரூ.6.61 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.