
ஆட்டோமேட்டிக் கார்களில் செய்யக்கூடாத 5 விஷயங்கள்!
செய்தி முன்னோட்டம்
கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்டோமேட்டிக் கார்கள் இந்தியாவில் பிரபலமாகி வருகின்றன. முக்கியமாக நகர வாடிக்கையாளர்கள் மேனுவலை விட ஆட்டோமேட்டிக் கார்களையே அதிகம் விரும்புகிறார்கள். ஆட்டோமேட்டிக் கார்களில் செய்யக்கூடாத ஐந்து விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
வாகனத்தை ஓட்டும்போது 'நியூட்ரல்' செய்யக் கூடாது:
மலையில் இருந்து இறக்கத்தில் இறங்கும்போது எரிபொருளை மிச்சம் செயவதற்காக சிலர் நியூட்ரல் செய்வார்கள். இது மிகவும் ஆபத்தான செயல். இதன் மூலம் தேவையான நேரத்தில் ஆக்சிலரேட் செய்ய முடியாமல் விபத்தில் சிக்க நேரிடும்.
கியர்ஷிப்டரின் மீது கைகளை வைத்து ஓய்வெடுக்காதீர்கள்:
மேனுவல் கியர் கார்களில் அவ்வப்போது கியரின் மீது ஓட்டுநர்கள் கை வைத்து ஓட்டுவார்கள். ஆட்டோமேட்டிக்கில் அப்படிச் செய்யும்போது தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
ஆட்டோ
கார் இயக்கத்தில் இருக்கும் போது கியரை மாற்றக்கூடாது:
ஆட்டோமேட்டிக் கார்கள் எந்தக் காரணம் கொண்டும், கார் இயக்கத்தில் இருக்கும் போது கியரை மாற்றக் கூடாது. மேனுவல் கார்களில் மட்டுமே இயக்கத்தில் கியரை மாற்றுவதற்கான தேவை இருக்கும். ஆட்டோமேட்டிக் கார்களில், கார் முழுமையாக நின்ற பின்பே கியரை தேவைக்கேற்ப மாற்ற வேண்டும்.
ஆக்ஸிலரேட்டர் மற்றும் பிரேக் பயன்பாடு:
ஆக்ஸிலரேட்டர் மற்றும் பிரேக்குகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடாது. இதனால் பிரேக்குகள் விரைவில் பழுதாவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் மைலேஜும் குறையும் வாய்ப்பிருக்கிறது.
பராமரிப்பு அவசியம்:
ஆட்டோமேட்டிக் கார்களில் குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு அவசியம். கார் உற்பத்தியாளர் குறிப்பிட்டிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி முறையாகப் பராமரிக்க வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தி்ல காரின் வாழ்நாளை நீட்டிக்க முடியும்.