Loading...
2026 MG ஹெக்டர் ஸ்டார்ம் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள் முழு விவரம்
2026 MG ஹெக்டர் ஸ்டார்ம் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

2026 MG ஹெக்டர் ஸ்டார்ம் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள் முழு விவரம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 08, 2026
04:56 pm

செய்தி முன்னோட்டம்

JSW MG மோட்டார் நிறுவனம், தனது புகழ்பெற்ற ஹெக்டர் மாடலில் 2026 'ஸ்டார்ம் சீரிஸ்' எனப்படும் பிளாக்ஸ்டார்ம் மற்றும் ஸ்னோஸ்டார்ம் ஆகிய இரு சிறப்பு எடிஷன் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இவ்விரு மாடல்களும் தலா ₹19,99,800 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனைக்கு வந்துள்ளன. பிளாக்ஸ்டார்ம், முற்றிலும் கரிய நிறத்தில் ஸ்போர்ட்டியான தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்னோஸ்டார், பர்ல்-ஒயிட் பாடி கலருடன், கான்ட்ராஸ்ட் ஸ்டாரி-பிளாக் கூரையைக் கொண்டுள்ளது. ஸ்டார்ம் ஹெக்ஸ் கிரில், டார்க் குரோம் MG லோகோக்கள், பிளாக் ரூஃப் ரெயில்கள், ரெட் பிரேக் காலிப்பர்களுடன் கூடிய ஆரா ஸ்டார்ம் பிளேட் அலாய் வீல்கள் மற்றும் ஸ்மோக்டு எல்இடி டெயில் லேம்ப்கள் இடம்பெற்றுள்ளன.

வடிவமைப்பு

பொதுவான சிறப்பம்சங்கள் மற்றும் இலவச அக்சஸரீஸ்

பேட்ஜ்கள், சிவப்பு நிற டெயில்கேட் ஆக்ஸெண்ட்கள், ORVM பாதுகாப்பான்கள் மற்றும் சைடு-ஸ்டெப் போர்டுகள் அடங்கிய அக்சஸரீஸ் பேக்கேஜ் டீலர்ஷிப்களில் எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி இலவசமாகப் பொறுத்தப்படுகிறது.

காரின் உட்புறம் முழுவதுமாக 'நிம்பஸ் பிளாக்' தீமில் லெதர் இருக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. முன்புற இருக்கைகளின் ஹெட்ரெஸ்ட்களில் எடிஷனின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

14 இன்ச் ஹெச்டி டச்போல்ட் தொடுதிரை தகவல் பொழுதுபோக்கு அமைப்பு, 70-க்கும் மேற்பட்ட வசதிகளைக் கொண்ட i-SMART கனெக்டெட் கார் தொழில்நுட்பம் மற்றும் டூயல்-பேன் பேனரோமிக் சன்ரூஃப், 8 நிறங்களில் ஆம்பியன்ட் லைட்டிங், பவர் டெயில்கேட் மற்றும் PM2.5 ஏர் பியூரிஃபையர் இடம்பெற்றுள்ளது.

இதனுடன் ADAS பாதுகாப்பு, 360 டிகிரி கேமரா மற்றும் வீல் வியூ வசதியும் உள்ளது.

செயல்திறன்

என்ஜின் மற்றும் செயல்திறன்

இந்த எடிஷன்களின் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இது 143 PS பவரையும் 250 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கிறது.

மேலும், இந்த ஸ்டார்ம் சீரிஸ் 5-சீட்டர் மாடலாக மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கிறது.

இக்கார்களுக்கு 84 மாதங்கள் வரையிலான கால அளவிற்கு ஆன்-ரோடு விலையில் 100% வரை கடன் வசதி வழங்கப்படுகிறது.

மேலும் MG Shield திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் வரம்பற்ற கிமீ வாரண்டி, 3 ஆண்டுகள் சாலை உதவி (Roadside Assistance) மற்றும் 3 இலவச சேவைகள் உள்ளடங்கிய 3+3+3 பேக்கேஜ் வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT