சூப்பர் மாடல் பைக்கை அறிமுகப்படுத்திய கவாஸாகி நிறுவனம்!
இந்திய வாகன சந்தையில் சூப்பர் பைக்குகளை தயாரிக்கும் கவாஸாகி நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது 2023 கவாஸாகி இசட் எச்2 மற்றும் இசட் எச்2 எஸ்இ ஆகிய பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சூப்பர் மாடல் பைக்குகள் இன்ஜினை பொருத்தவரை கவாஸாகி இசட் சிரீஸில் பயன்படுத்தும் 998 சிசி இன்-லைன் 4 சிலிண்டர், லிக்யூட் கூல்டு சூப்பர் சார்ஜ்டு இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த பைக்களில் மிக முக்கிய அம்சமாக இசட் எச்2 பைக்கின் முன்பக்க வீலில் பிரெம்போ எம்4.32 பிரேக் கேலிபரும், இசட் எச்2 எஸ்இ பைக்கின் முன்பக்க வீலில் பிரெம்போ ஸ்டைலிமா பிரேக் கேலிபரும் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த பைக்குகளில் எலெக்ட்ரானிக் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் த்ராட்டல் வேல்யூஸ், ரைடிங் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கவாஸாகி நிறுவனத்தின் ZH2, ZH2 SE பைக்குகள் அறிமுகம் - விலை என்ன?
ஸ்டைலிங்கிலும் இந்த இரு பைக்குகளுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. முக்கியமாக இந்த இசட் எச்2 மற்றும் இசட் எச்2 எஸ்இ ஆகிய இரண்டு பைக்குகளும் பில்டு டூ ஆர்டர் என்ற அடிப்படையில் விற்பனை செய்கின்றனர். அதாவது வாடிக்கையாளர் வந்து தனக்கு இந்த பைக் வேண்டும் என கவாஸாகி நிறுவனத்திடம் கேட்டு அதற்கான முழு பணத்தையும் செலுத்தி பின்பு தான் இந்த பைக்கையே தயாரித்து வழங்குவார்கள். விலை விபரம் கவாஸாகி இசட் எச்2 பைக் ரூ23.02 லட்சம் என்ற விலையிலும் கவாஸாகி இசட் எச்2 எஸ்இ பைக் ரூ27.22 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. எனவே, இந்த பைக்கிற்கான புக்கிங் தற்போது துவங்கியுள்ளது. முழு பணத்தையும் செலுத்தி புக்கிங் செய்ய வேண்டும்.