Loading...
விண்வெளியில் அமைதிப் புரட்சி! அமைதிக்கான நோபல் பரிசுப் போட்டியில் சர்வதேச விண்வெளி மையம்; பின்னணி என்ன?
அமைதிக்கான நோபல் பரிசுப் போட்டியில் சர்வதேச விண்வெளி மையம்

விண்வெளியில் அமைதிப் புரட்சி! அமைதிக்கான நோபல் பரிசுப் போட்டியில் சர்வதேச விண்வெளி மையம்; பின்னணி என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Oct 05, 2026
03:51 pm

செய்தி முன்னோட்டம்

2026 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு வாரத்தின் தொடக்கத்தில், அக்டோபர் 9 அன்று அறிவிக்கப்படவுள்ள அமைதிக்கான நோபல் பரிசுப் போட்டியில் சர்வதேச விண்வெளி மையம் (ISS) ஒரு முக்கியப் போட்டியாளராக உருவெடுத்துள்ளது. இந்த ஆண்டிற்கான அமைதிப் பரிசுக்கு மொத்தம் 287 தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் உலகளாவிய கணிப்பு சந்தைகள் மற்றும் சர்வதேச அமைதி ஆராய்ச்சி அமைப்புகளின் கவனத்தை விண்வெளியில் செயல்பட்டு வரும் சர்வதேச விண்வெளி மையம் பெருமளவில் ஈர்த்துள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

ஒத்துழைப்பின் அடையாளம்

உலகளாவிய ஒத்துழைப்பின் அடையாளமாகத் திகழும் விண்வெளி மையம்

உலகில் பல்வேறு நாடுகளுக்கு இடையே போர் சூழல்களும், அரசியல் பதற்றங்களும் அதிகரித்து வரும் வேளையில், சர்வதேச விண்வெளி மையமானது உலகளாவிய ஒத்துழைப்பின் ஈடிணையற்ற அடையாளமாகத் திகழ்கிறது.

நார்வே நாட்டின் ஓஸ்லோ அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, பன்னாட்டு உறவுகள் சீர்குலைந்து வரும் இந்த சூழலில், பல்வேறு நாடுகள் தங்களின் சுயநல அரசியல் நலன்களுக்குள் முடங்கி வரும் நேரத்தில், சர்வதேச விண்வெளி நிலையம் விண்வெளியை நோக்கி மனிதகுலத்தின் கூட்டு முயற்சியை வெளிப்படுத்தி வருகிறது.

அரசியல் எதிரிகள்

அரசியல் எதிரிகளை ஒன்றிணைக்கும் அமைதி முயற்சி

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சர்வதேச விண்வெளி மையமானது, உலகில் சர்வதேச உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட போதிலும், அரசியல் ரீதியான எதிரி நாடுகள் எவ்வாறு அமைதியான அறிவியல் ஆராய்ச்சிக்காக கைகோர்க்க முடியும் என்பதை தொடர்ச்சியாக நிருபித்து வருகிறது.

தற்போது அமெரிக்கா, ரஷ்யா, கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த 11 விண்வெளி வீரர்கள் ஒன்றாக இணைந்து இங்கு பணியாற்றி வருகின்றனர்.

விண்வெளி ராணுவமயமாக்கப்பட்டு வரும் சூழலில், மனிதகுலத்தின் இந்த அமைதிப் பங்களிப்பு உலகளவில் பாராட்டைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

டொனால்ட் டிரம்ப்

போட்டியில் உள்ள பிற தலைவர்கள் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்பின் எதிர்பார்ப்பு

சர்வதேச விண்வெளி மையம் தவிர்த்து, கனடா பிரதமர் மார்க் கர்னி மற்றும் அமெரிக்காவில் பிறந்த முதல் போப் ஆண்டவரான போப் லியோ ஆகியோரின் பெயர்களும் இந்தப் பந்தயத்தில் முன்னணியில் உள்ளன.

மேலும், உலகின் பல்வேறு போர்களை முடிவுக்குக் கொண்டுவந்ததாகக் கூறிக்கொள்ளும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்த விருதை எதிர்பார்த்துள்ளார்.

நார்வே நோபல் கமிட்டி யார் பெயரை கடைசியாக தேர்வு செய்யப்போகிறது என்பதை உலகம் முழுவதும் உள்ள அமைதி விரும்பிகள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

ADVERTISEMENT