சிட்னி பாண்டி கடற்கரை தாக்குதலில் ஹீரோவாக மாறிய பொதுமகன்: வைரல் ஆகும் வீடியோ
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பாண்டி கடற்கரை பகுதியில், யூதர்களின் முக்கியமான பண்டிகையான ஹனுக்கா கொண்டாட்டத்தின் முதல் நாளில் நடத்தப்பட்ட கோரமான தாக்குதல் உலகை உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதல் யூதர்களுக்கு எதிரான தீவிரவாதச் செயல் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார். பண்டிகையை கொண்டாடக் கூடியிருந்த யூத சமூகத்தினரை குறிவைத்தே துப்பாக்கிகளால் சுடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர்; சுமார் 40 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடந்தபோது, அங்கே இருந்த பழக்கடை உரிமையாளரான அஹமது அல்-அஹமது என்பவர் தன்னுடைய உயிரை பற்றி கவலைப்படாமல், துணிச்சலுடன் ஒரு குற்றவாளியை மடக்கிப் பிடித்து, அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
BREAKING: Video shows the moment a civilian disarming a Bondi Beach shooter pic.twitter.com/0IbMIeNE5N
— Insider Paper (@TheInsiderPaper) December 14, 2025
விவரம்
யார் இந்த அஹமது அல்-அஹமது?
உள்ளூர் ஊடகமான 7NEWS, துப்பாக்கிதாரியை துணிச்சலுடன் தாக்கிய நபரை அடையாளம் கண்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தின்போது அவர் இரண்டு துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, சிட்னியின் சதர்லேண்ட் ஷையரைச் சேர்ந்த அகமது இரண்டு குழந்தைகளின் தந்தை, மேலும் உள்ளூர் பழ வியாபாரத்தை நடத்தி வந்தார். அகமதுவின் உறவினர், அவர் அனுமதிக்கப்பட்டிருந்த செயிண்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு வெளியே 7NEWS ஆஸ்திரேலியாவிடம் ஒரு அறிக்கையை வழங்கினார். "அவர் மருத்துவமனையில் இருக்கிறார், உள்ளே என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு சரியாகத் தெரியவில்லை. அவர் நலமாக இருப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் 100 சதவீதம் ஒரு ஹீரோ," என்று முஸ்தபா செய்தித்தாளிடம் கூறினார்.