
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மசூதிக்கு சென்ற கனேடிய பிரதமர் ட்ரூடோவை அவமானப்படுத்திய மக்கள்
செய்தி முன்னோட்டம்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, டொரோண்டோவில் உள்ள ஒரு மசூதிக்கு சென்றிருந்த போது அவருக்கு எதிராக மக்கள் கூச்சலிட்டு பிரச்சனை செய்த விவகாரம் தற்போது வைராகி வருகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடங்கிய போது, இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரதமர் ட்ரூடோ பேசியிருந்தார்.
இந்நிலையில், அந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமியர்கள், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மசூதிக்கு சென்றிருந்த போது அவருக்கு எதிராக கூச்சலிட்டிருக்கின்றனர்.
மேலும், "நீங்கள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் முன் எத்தனை பாலஸ்தீனிய குழந்தைகள் படுகொலை செய்யப்பட வேண்டும்?" என்ற கேள்விகளும் அப்போது எழுப்பப்பட்டது.
இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
வைரலாகி வரும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் வீடியோ
PM Justin Trudeau embarrassed and rejected from Canada Mosque pic.twitter.com/8NUhjYrzyr
— Mohammed Hijab (@mohammed_hijab) October 20, 2023