NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
    அடுத்த செய்திக் கட்டுரை
    அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
    இது அரசுக்கு சொந்தமானதா அல்லது கார்பரேட் நிறுவனத்திற்கு சொந்தமானதா என்பது தெரியவில்லை

    அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

    எழுதியவர் Sindhuja SM
    Feb 11, 2023
    01:03 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று நேற்று(பிப் 10) அலாஸ்காவின் வானில் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத பொருளை சுட்டு வீழ்த்தியது.

    புதிய பறக்கும் பொருளின் நோக்கம் அல்லது அது எங்கிருந்து வந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் 40,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்ததால் அது சிவில் விமானப் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருந்தது. அதனால் தான் அது சுட்டு வீழ்த்தப்பட்டது என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார்.

    மேலும், "அதிபர் அதை சுட்டு வீழ்த்த ராணுவத்திற்கு உத்தரவிட்டார்." என்று கிர்பி கூறி இருக்கிறார்.

    இந்த சம்பவம் குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ​​துப்பாக்கிச் சூடு "வெற்றிகரமாக முடிக்கப்பட்டது" என்று பைடன் கூறியுள்ளார்.

    அமெரிக்கா

    ஒரு சிறிய காரின் அளவு இருந்த அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள்

    கடந்த வாரம் அமெரிக்க வான்வெளியில் காணப்பட்ட சீன பலூனை விட இந்த பொருள் மிகவும் சிறியது என்றும், சனிக்கிழமை அட்லாண்டிக் கடற்கரையில் அமெரிக்க போர் விமானத்தால் அது சுட்டு வீழ்த்தப்பட்டது என்றும் கிர்பி கூறினார்.

    அது "தோராயமாக ஒரு சிறிய காரின் அளவு இருந்தது" என்று அவர் கூறியுள்ளார்.

    "இது அரசுக்கு சொந்தமானதா அல்லது கார்பரேட் நிறுவனத்திற்கு சொந்தமானதா என்பது எங்களுக்குத் தெரியாது," என்று கூறிய அவர் "எங்களுக்கு முழு நோக்கமும் புரியவில்லை." என்றும் தெரிவித்திருக்கிறார்.

    F-22 ராப்டார் AIM-9X ஏவுகணையைப் பயன்படுத்தி அந்தப் பொருள் வீழ்த்தபட்டது என்றும் அதே ஏவுகணை மற்றும் வெடிமருந்துகள் தான் சீன 'வேவு' பலூனை வீழ்த்தவும் பயன்படுத்தப்பட்டன என்றும் பென்டகன் செய்தித் தொடர்பாளர் பாட்-ரைடர் கூறியுள்ளார்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    அமெரிக்கா

    சமீபத்திய

    ராகுல் காந்தியின் டெல்லி பல்கலைக்கழக வருகை சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது- என்ன காரணம்? ராகுல் காந்தி
    அடிக்கடி அலாரத்தை ஸ்னூஸ் செய்துவிட்டு தூங்குபவரா நீங்கள்? இனி அப்படி செய்யாதீங்க தூக்கம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தைத் தாக்கும் இந்தியா, உலக வங்கி மற்றும் FATF அமைப்பை அணுக போவதாக தகவல் உலக வங்கி
    ஆன்லைன் பேட்டிங் செயலிகளை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனு; மத்திய அரசுக்கு நோட்டீஸ் ஆன்லைன் கேமிங்

    உலகம்

    300 பேரை காவு வாங்கிய துருக்கி, சிரியா நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவு உலக செய்திகள்
    இந்திய பெண் பயணியை அவமதித்த அமெரிக்க விமான நிறுவனம்-உதவ மறுத்த விமான ஊழியர்கள் அமெரிக்கா
    சீன 'வேவு' பலூனை சுட்டு தள்ளியது அமெரிக்கா: சீனா என்ன சொல்கிறது சீனா
    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் உயிரிழப்பு: யார் இந்த பர்வேஸ் முஷாரப் பாகிஸ்தான்

    அமெரிக்கா

    2023: தொழில் நுட்ப நிறுவனங்கள் மீதான ஒழுங்குமுறை நடவடிக்கையை தீவிரப்படுத்த போகும் இந்தியா தொழில்நுட்பம்
    கடந்த ஆண்டில் மட்டும் 1.24 லட்சம் மாணவர்களுக்கு விசா வழங்கிய அமெரிக்கா! இந்தியா
    விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர் கைது - கைதான ஷங்கர் மிஸ்ராவின் தந்தை பேட்டி விமானம்
    வெறும் 98 வினாடிகளில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிக்கெட்டுகள் அமெரிக்காவில் விற்பனை சிறப்பு செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025