LOADING...
ஓமன் அருகே இந்திய மாலுமிகள் உள்ள கப்பல் 'எம்.டி ஜல்வீர்' மீது தாக்குதல்
இந்திய மாலுமிகள் உள்ள கப்பல் 'எம்.டி ஜல்வீர்' மீது தாக்குதல்

ஓமன் அருகே இந்திய மாலுமிகள் உள்ள கப்பல் 'எம்.டி ஜல்வீர்' மீது தாக்குதல்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 11, 2026
01:35 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், வளைகுடாப் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. ஓமன் நாட்டு கடற்கரைக்கு அருகே இந்திய மாலுமிகள் பயணித்த மேலும் ஒரு வணிகக் கப்பல் (MT Jalveer) மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் ஹார்முஸ் நீரிணை மற்றும் ஓமன் கடற்பகுதியில் இந்தியர்கள் பயணித்த கப்பல் மீது நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.

தாக்குதல்

மூன்றாவது கப்பல் 'எம்.டி ஜல்வீர்' மீது தாக்குதல்

ஓமனின் ஷினாஸ் துறைமுகத்திற்கு அருகே கினியா-பிசாவ் நாட்டின் கொடியுடன் சென்று கொண்டிருந்த 'எம்.டி ஜல்வீர்' என்ற எண்ணெய் விநியோகக் கப்பல் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இக்கப்பலில் 20-க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. "ஓமனின் ஷினாஸ் துறைமுகத்திற்கு அருகே வணிகக் கப்பல் பாதிக்கப்பட்டுள்ள சம்பவத்தை நாங்கள் அறிந்துள்ளோம். நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதோடு, கூடுதல் விவரங்களைப் பெற உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்" என்று ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

உயிரிழப்பு

அமெரிக்க தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் மரணம்

இதற்கிடையே, நேற்று முன்தினம் (ஜூன் 9) நள்ளிரவில் அமெரிக்கப் படைகளால் தாக்கப்பட்ட பலாவு நாட்டின் கொடியுடன் சென்ற 'எம்.டி செட்டபெல்லோ' என்ற கப்பலில் காணாமல் போன 3 இந்திய மாலுமிகளும் உயிரிழந்துவிட்டதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். இக்கப்பலில் இருந்த 24 இந்தியர்களில் 21 பேர் ஓமன் அதிகாரிகளின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் மத்திய கட்டளை அலுவலகம் (US CENTCOM) இந்தத் தாக்குதலை ஒப்புக்கொண்டுள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் கடல்சார் பொருளாதார தடையை மீறி, அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய்யை கடத்த முயன்றதால், எச்சரிக்கைக்கு பிறகு கப்பலின் எஞ்சின் அறையை நோக்கித் துல்லியமான வெடிபொருட்களை கொண்டு தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Advertisement

நடவடிக்கை

தொடர் தாக்குதல்களும், இந்தியாவின் தூதரக நடவடிக்கையும்

கடந்த சில நாட்களில் அமெரிக்கப் படைகளால் இலக்கு வைக்கப்படும் மூன்றாவது கப்பல் இதுவாகும். ஜூன் 8: முதலாவதாக 'எம்.டி மாரிவெக்ஸ்' என்ற கப்பல் தாக்கப்பட்டது (24 இந்திய மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்). ஜூன் 9: இரண்டாவதாக 'எம்.டி செட்டபெல்லோ' தாக்கப்பட்டது (3 இந்தியர்கள் பலி, 21 பேர் மீட்பு). ஜூன் 11 (இன்று): மூன்றாவதாக 'எம்.டி ஜல்வீர்' (MT Jalveer) கப்பல் தாக்கப்பட்டு புகை கிளம்பும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Advertisement