Loading...
இந்தியர்களுக்கு அடுத்த அதிர்ச்சி! அமெரிக்க இபி-1 கிரீன் கார்டு பெற புதிய சிக்கல்
அமெரிக்க இபி-1 கிரீன் கார்டு பெற புதிய சிக்கல்

இந்தியர்களுக்கு அடுத்த அதிர்ச்சி! அமெரிக்க இபி-1 கிரீன் கார்டு பெற புதிய சிக்கல்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 03, 2026
07:13 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு சார்ந்த இபி-1 (EB-1) கிரீன் கார்டு பெறக் காத்திருக்கும் இந்தியர்களுக்கு அந்நாட்டு அரசு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. நடப்பு நிதியாண்டு முடிவடையும் முன், இந்தியர்களுக்கான இபி-1 விசா எண்ணிக்கைகள் முடிவடையும் அபாயம் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இபி-2 மற்றும் இபி-3 பிரிவுகளில் நீண்ட காத்திருப்புப் பட்டியலில் சிக்கித் தவிக்கும் இந்தியப் பணியாளர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எச்சரிக்கை

அமெரிக்க ராஜாங்கத் துறையின் அதிகாரப்பூர்வ எச்சரிக்கை

அமெரிக்கா வெளியிட்டுள்ள விசா அறிவிக்கையின்படி, இந்தியர்களிடையே இபி-1 பிரிவிற்கான தேவை மிக அதிகளவில் உள்ளது.

இதனால், செப்டம்பர் 30-க்குள் இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட விசா வரம்பு எட்டப்பட்டால், எஞ்சிய நாட்களுக்கு இபி-1 பிரிவு தற்காலிகமாகக் கிடைக்காமல் போகும் நிலைக்குத் தள்ளப்படும்.

நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுத் தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரம்

முக்கியப் பிரிவுகளில் நிலவும் தற்போதைய நிலவரம்

சிறந்த திறமைசாலிகள் மற்றும் நிறுவன நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் இபி-1 பிரிவில், இந்தியர்களுக்கான முதன்மைத் தகுதி தேதி அக்டோபர் 15, 2022 ஆக உள்ளது.

அதேநேரத்தில், உயர்கல்வி தகுதி சார்ந்த இபி-2 பிரிவு முழுமையாகக் கிடைக்காத 'Unavailable' நிலையில் உள்ளது.

மேலும், இபி-3 பிரிவில் உள்ள இந்திய விண்ணப்பதாரர்களுக்குக் ஜனவரி 1, 2014 மட்டுமே தகுதித் தேதியாக உள்ளதால் 12 ஆண்டுகளுக்கும் மேலான காத்திருப்புப் பட்டியல் நிலவுகிறது.

ADVERTISEMENT

காரணங்கள்

நீண்ட காத்திருப்புப் பட்டியலுக்கான முதன்மை காரணங்கள்

அமெரிக்கக் குடிவரவு சட்டத்தின்படி, வேலைவாய்ப்பு சார்ந்த கிரீன் கார்டுகளுக்கு ஆண்டிற்கு 1,86,317 உலகளாவிய வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் எந்த ஒரு தனி நாட்டிற்கும் 7 சதவீதத்திற்கு மேல் விசா வழங்கக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.

இந்தியப் பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த சட்டப்பூர்வ வரம்புகள் காரணமாகக் காத்திருப்புப் பட்டியல் பல ஆண்டுகளாக நீடித்துக்கொண்டே செல்கிறது.

ADVERTISEMENT