ஹார்முஸ் ஜலசந்தியில் வைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றம்: அமெரிக்க சென்ட்காம் தளபதி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிலவி வரும் சூழலில், உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படையினரால் (IRGC) வைக்கப்பட்டிருந்த கடல் கண்ணிவெடிகளை அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாக அகற்றியுள்ளன. இதனை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். எக்ஸ்(X) தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் பிராட் கூப்பர், "இந்த நடவடிக்கை மிகவும் சவாலானது மற்றும் ஆபத்தானது ஆகும். தற்போது சர்வதேசக் கப்பல் பாதைகள் பாதுகாப்பாகத் திறக்கப்பட்டுள்ளன. வணிகக் கப்பல்களின் போக்குவரத்து மீண்டும் வேகம் பெற்றுள்ளது" எனத் தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Update from CENTCOM Commander: pic.twitter.com/osPbltjJ1C
— U.S. Central Command (@CENTCOM) August 28, 2026
கண்காணிப்பு
50,000 அமெரிக்க வீரர்கள் தீவிரக் கண்காணிப்பு
ஹார்முஸ் பகுதியில் வணிக கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு, ஈரானுக்கு எதிராக கடற்படை முற்றுகையையும் அமெரிக்கப் படைகள் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன.
இப்பகுதியில் சுமார் 50,000 அமெரிக்கப் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களில் 750 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை சுமந்து சென்ற சுமார் 1,500 வணிகக் கப்பல்கள் அமெரிக்கப் படைகளின் வழிகாட்டுதலுடன் இப்பாதையை கடந்துள்ளன.
அமெரிக்காவின் அனுமதியின்றி ஈரான் துறைமுகங்களுக்குச் செல்ல முயன்ற 75 வணிகக் கப்பல்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளன.
பொருளாதார முற்றுகை
ஈரானுக்கு எதிராக 'ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்'
பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான ராணுவத் தாக்குதலுக்குப் பிறகு, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க முயற்சி செய்தது.
அதற்கு பதிலடியாக, அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் ஈரானுக்கு எதிராக 'ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்' என்ற உலகளாவிய பொருளாதார முற்றுகையை அறிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் 'டி-டே' தாக்குதலை போல, ஈரானின் நிதி ஆதாரங்கள், டிஜிட்டல் சொத்துக்கள், தங்கம், விமானப் போக்குவரத்து மற்றும் ஷிப்பிங் துறை தொடர்புகளை உலகளவில் முற்றிலும் துண்டிக்க அமெரிக்கா தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஈரானுடன் நிதியுறவு வைத்துள்ள நாடுகள் மீது கடும் தடைகள் விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.