Page Loader
'போயிங் 737 MAX 9' விமானங்களில் உள்ள கதவுகளின் போல்ட்கள் லூசாக இருந்ததாக சோதனையில் தகவல் 

'போயிங் 737 MAX 9' விமானங்களில் உள்ள கதவுகளின் போல்ட்கள் லூசாக இருந்ததாக சோதனையில் தகவல் 

எழுதியவர் Sindhuja SM
Jan 09, 2024
01:32 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா: கடந்த சனிக்கிழமை, 174 பயணிகளை ஏற்றி சென்ற அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் அவசர வெளியேறும் கதவு நடுவானில் பிய்ந்து காற்றோடு பறந்தது. அதனையடுத்து, அந்த விமானம் அமெரிக்காவில் உள்ள போர்ட்லேண்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, அந்த விமானத்தில் இருந்த பயணிகளும் பணியாளர்களும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பான சூழலை உருவாக்கியது. எனவே, இந்த பிரச்சனையை கருத்தில் கொண்டு, அதே வகையை சேர்ந்த அனைத்து போயிங் ஜெட் விமானங்களையும் சோதனை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த சோதனையின் போது பல போயிங் 737 மேக்ஸ் 9 விமானங்களின் கதவு செருகிகளில் தளர்வான போல்ட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக யுனைடெட் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

தகவ்ல்ன்

எதனால் விமானத்தின் கதவு நடுவானில் பிய்ந்து காற்றோடு பறந்தது?

அலாஸ்கா விமானத்தில் நடந்த பயங்கரமான சம்பவத்திற்குப் பிறகு, ஜனவரி 6ஆம் தேதி, சனிக்கிழமையன்று ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகத்தால் டஜன் கணக்கான 737 மேக்ஸ் 9 விமானங்கள்தடுத்து வைக்கப்பட்டன. அதன் பிறகு, போயிங் 737 MAX 9 விமானங்கள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. "சனிக்கிழமை ஆரம்ப ஆய்வுகளை நாங்கள் தொடங்கியதில் இருந்து, கதவு பிளக்கில் உள்ள போல்ட்கள் தளர்வாக இருந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். கூடுதல் இறுக்கத்துடன் டைட் செய்ய வேண்டிய கதவு போல்ட்கள் கண்டறியப்பட்டுள்ளன" என்று யுனைடெட் ஏர்லைன்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. "இந்த பிரச்சனைகளை எங்கள் டெக் ஆப்ஸ் குழு சரிசெய்து விமானத்தை பாதுகாப்பாக சேவைக்கு திருப்பி அனுப்பும்." என்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.