Loading...
பிரிட்டனில் மீண்டும் ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் கோளாறு: 1000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
பிரிட்டனில் மீண்டும் ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் கோளாறு

பிரிட்டனில் மீண்டும் ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் கோளாறு: 1000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

எழுதியவர் Venkatalakshmi V
Sep 09, 2026
09:41 am

செய்தி முன்னோட்டம்

பிரிட்டனின் தேசிய வான்வழிப் போக்குவரத்து சேவை அமைப்பான NATS அமைப்பின் விமானத் தரவு செயலாக்க கணினியில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பிரிட்டன் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுப் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லண்டனின் ஹீத்ரோ, கேட்விக், லூட்டன், எடின்பர்க் மற்றும் அபெர்டீன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட முக்கிய விமான நிலையங்களில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக ஃபிளைட் ராடார் 24 தளம் தெரிவித்துள்ளது. ஹீத்ரோ விமான நிலையத்தில் மட்டும் சுமார் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 367 விமானங்கள் தாமதமாகின. கேட்விக் விமான நிலையத்தில் 31 சதவீத சேவைகள் தாமதடைந்தன.

சேவைகள் முடக்கம்

சர்வதேச விமான நிறுவனங்களின் சேவைகள் முடக்கம்

பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஈசிஜெட், கேஎல்எம், லுஃப்தான்சா உள்ளிட்ட சர்வதேச விமான நிறுவனங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

மேலும், இந்தியாவிலிருந்து பிரிட்டன் செல்லும் மற்றும் பிரிட்டனிலிருந்து திரும்பும் ஏர் இந்தியா விமானச் சேவைகளும் தாமதம், வழிமாற்றம் மற்றும் ரத்து நடவடிக்கைகளுக்கு உள்ளாகின.

விமானங்களும் ஊழியர்களும் தவறான இடங்களில் முடங்கியதால் பிற வழித்தடச் சேவைகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

பிரிட்டன் வான்வெளி திறந்தே இருந்தபோதிலும், விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு கட்டுப்படுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதியடைந்தனர்.

மாலை வேளையில் பொறியாளர்கள் அக்கோளாறை சரிசெய்துவிட்டதாகவும், சிஸ்டம் மெதுவாக மீண்டு வருவதாகவும் NATS அறிவித்துள்ளது.

இருப்பினும், விமானங்களின் வரிசையைக் சீரமைக்க மேலும் சில நாட்கள் ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT