Page Loader
2022ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய சம்பவங்கள்!
உக்ரைன்-ரஷ்யா மோதல்(படம்: The Federal)

2022ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய சம்பவங்கள்!

எழுதியவர் Sindhuja SM
Dec 31, 2022
06:25 pm

செய்தி முன்னோட்டம்

நாட்கள் மிக வேகமாக உருண்டோடி கொண்டிருந்தாலும் உலகில் பல பயங்கரமான சம்பவங்களும் சில நல்ல சம்பவங்களும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், 2022ஆம் ஆண்டில் நிகழ்ந்த 10 முக்கிய சம்பவங்களை இப்போது பார்க்கலாம். 10. இங்கிலாந்தில் நீண்ட காலம் ஆட்சி செய்த இரண்டாம் எலிசபெத் மகாராணி இறந்து, இளவரசர் சார்லஸ் மன்னராக பதவியேற்றார். 9. நவம்பர் 23ஆம் தேதி, கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறினார். 8. 48,500 ஆண்டுகள் பழமையான உறைந்த நிலையில் இருந்த ஜாம்பி வைரஸை ரஷ்ய விஞ்ஞானிகள் கட்டவிழ்த்து விட்டனர். 7. ஏப்ரல் மாதத்தில் எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கினார். 6. பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமராகி 'ரிஷி சுனக்' வரலாறு படைத்தார்.

உலகம்

முதல் 5 இடங்களில் இருக்கும் நிகழ்வுகள்:

5. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அக்டோபர் 23 அன்று, சீன கம்யூனிஸ்ட் கட்சியின்(CPC) பொதுச் செயலாளராக மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, மாசேதுங்கிற்குப் பிறகு நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக வரலாற்றில் தனது இடத்தைப் பதித்திருக்கிறார். 4. ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு, பெண்கள் உயர்கல்வி கற்பதற்கு நிரந்தர தடை விதித்தது. 3. ஈரான் நாட்டில் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஆடை கட்டுப்பாடுகளுக்கு எதிராக மிகப்பெரும் 'ஹிஜாப்' கிளர்ச்சி ஏற்பட்டது. 2. இலங்கையில் அடிப்படை தேவைகளுக்கு கூட சிரமப்படும் அளவிற்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால், மக்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். 1. பிப்ரவரி மாதம், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. இதற்கு எதிராக உக்ரைன் இன்னும் போராடி கொண்டிருக்கிறது.