
ஜப்பான் தீவு முழுவதும் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள்-வைரலாகும் வீடியோ
செய்தி முன்னோட்டம்
ஜப்பான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சூ தீவில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக ஒரே நேரத்தில் சூழ்ந்த விசித்திர சம்பவம் ஒன்று அண்மையில் அரங்கேறியுள்ளது.
வானில் கூட்ட கூட்டமாக பறந்த காகங்கள், அந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள், வாகனங்கள், சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் ஆயிரக்கணக்கில் கூடியுள்ளது.
இதனை கண்டு மக்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
தீவு முழுவதும் காகங்கள் சூழ்ந்த இந்த சம்பவத்தின் வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவத்துவங்கியது.
இந்நிலையில் இந்த சம்பவம் இயற்கை பேரழிவை உணர்த்தும் வகையில் உள்ளதாக நிபுணர்கள் பலர் கூறி வருகிறார்கள்.
இதே போன்ற சம்பவம் துருக்கியில் நிலநடுக்கம் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரும் இதேபோன்று பறவைகள் ஒலி எழுப்பியவாறு கூட்டக்கூட்டமாக பறந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ஜப்பான் தீவு முழுவதும் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள்-வைரலாகும் வீடியோ
Flocks of Crows arrive in areas of Kyoto, Honshu, Japan. (07.02.2023). 🧐 pic.twitter.com/f4VkwP8ll6
— BRAVE SPIRIT🇺🇦 (@Brave_spirit81) February 8, 2023