
ஆண்ட்ரூ டேட்டிற்கு ஆதரவளிக்கிறதா தாலிபான்?
செய்தி முன்னோட்டம்
ஆள்கடத்தல், பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்காக ஆண்ட்ரூ டேட் என்னும் சமூகவலைதள பிரபலம் கைது செய்யப்பட்டார்.
இவரை கடந்த டிசம்பர் 29ஆம் தேதி ரோமானிய அதிகாரிகள் கைது செய்தனர்.
பெண் வெறுப்பாளரான இவருக்கு பல எதிர்ப்பாளர்களும் ஆதரவாளர்களும் இருக்கின்றனர்.
இந்நிலையில், சமீரா கான் என்னும் "விழிப்புணர்ச்சி எதிர்ப்பு" பத்திரிகையாளர் கூறி இருப்பதாவது:
ஆண்ட்ரூ டேட் காவலில் வைக்கப்பட்டது குறித்து விவாதிக்க தாலிபான்களுடன் ட்விட்டர் குழு ஒன்றை நாங்கள் நடத்துகிறோம்.
தாலிபான்கள் ஆண்ட்ரூ டேட்டைப் பற்றி கவலைப்படுகிறார்கள்.
பெண்ணியவாதிகளால் ஒடுக்கப்படுவதால் மேற்கத்திய நாடுகளுக்கு ஆண்ட்ரூ டேட் போன்ற ஒருவர் தேவை என்று அவர்கள் கூறுகிறார்கள். என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், ஆண்ட்ரூவை விடுதலை செய்யக்கோரி #FREETOPG என்ற ஹாஷ்டாக்கையும் இவர் பதிவு செய்து வருகிறார்.
ட்விட்டர் அஞ்சல்
'ஆண்ட்ரூ டேட்-தாலிபான்' ட்விட்டர் குழு இருப்பதற்கான ஆதாரத்தை வெளியிட்ட பிரிட்டிஷ் செய்தியாளரின் பதிவு:
This actually happened. pic.twitter.com/PzOlUoXAjJ
— Otto English (@Otto_English) January 1, 2023