கவிஞர் கல்லறையில் கிரேட்டர் ஆப்கானிஸ்தான் வரைபடத்தை நிறுவிய தாலிபான்; பாகிஸ்தான் அதிர்ச்சி
செய்தி முன்னோட்டம்
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லைப் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், தாலிபான்கள் ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள பாஷ்டோ கவிஞர் மதியுல்லா துராப் என்பவரின் கல்லறையின் மீது, 'கிரேட்டர் ஆப்கானிஸ்தான்' என்று குறிப்பிடப்பட்ட வரைபடம் ஒன்றை அவர்கள் நிறுவியுள்ளனர். இந்த வரைபடத்தில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பெரும் பகுதிகளும், வடக்கு பலுசிஸ்தானின் பகுதிகளும் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு உட்பட்டதாகக் காட்டப்பட்டுள்ளன. கடந்த மாதம் இறுதியில், பாகிஸ்தான் மூன்று ஆப்கானிஸ்தான் மாகாணங்கள் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே பதற்றம் நிலவியது குறிப்பிடத்தக்கது.
கவிஞர் துராப்
கவிஞர் துராப் குறித்த தகவல்
கல்லறையில் வரைபடம் வைக்கப்பட்ட பாஷ்டோ கவிஞர் மதியுல்லா துராப், 1971 இல் பிறந்தவர் ஆவார். முறையான கல்வி இல்லாவிட்டாலும் கூட, தனது தேசியவாத மற்றும் புரட்சிகரமான கவிதைகளால் பெரும் புகழ் பெற்றவர் ஆவார். பாகிஸ்தானின் பாஷ்டோ பேசும் பகுதிகளிலும் இவர் பாராட்டப்படுபவர் மற்றும் ஆப்கானிஸ்தான் உருவாக்கத்தின்போது நிர்ணயிக்கப்பட்ட 2,640 கி.மீ டூரன்ட் எல்லைக் கோட்டை (Durand Line) ஆப்கானிஸ்தான் ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்ததில்லை. இந்தப் புதிய வரைபடத்தின் மூலம், தற்போதுள்ள எல்லையை நிராகரிக்கும் தாலிபானின் தொடர்ச்சியான நிலைப்பாட்டை இது உறுதி செய்கிறது. இதற்கிடையே, ஆப்கானிஸ்தானின் இந்த நடவடிக்கை, பாகிஸ்தான் தரப்பில் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.