Page Loader
"இந்திய ரூபாயையும் அதிகம் பயன்படுத்தவே விரும்புகிறோம்", இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங் 
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க

"இந்திய ரூபாயையும் அதிகம் பயன்படுத்தவே விரும்புகிறோம்", இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங் 

எழுதியவர் Prasanna Venkatesh
Jul 15, 2023
04:22 pm

செய்தி முன்னோட்டம்

இலங்கையில் கடந்தாண்டு பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கிடையே நாட்டைவிட்டு தப்பியோடினார் அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே. அவரது பதவிக்காலம் முடியும் வரை ஆட்சி செய்ய பாரளுமன்றத்தால் அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டு முறையாக பதவியேற்றுக் கொண்டார் ரணில் விக்ரமசிங்க. அவரே தற்போது அந்நாட்டின் நிதியமைச்சராகவும் செயல்பட்டு வருகிறார். மேலும், அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின் முதல் முறையாக அடுத்த வாரம், டெல்லிக்கு வருகை தரவிருக்கிறார். அதற்கு முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கையில் தலைநகரான கொழும்புவில் நடைபெற்ற இந்திய சிஇஓ மன்றத்தில் உரையாற்றியிருக்கிறார் ரணில் விக்ரமசிங்க. அந்த நிகழ்வில் இலங்கையில் இந்திய நாணயத்தைப் பயன்படுத்துவது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் ரணில் விக்ரமசிங்க.

இலங்கை

ரூபாயின் பயன்பாடு குறித்த ரணில் விக்ரமசிங்கவின் கருத்து: 

அந்நிகழ்வில் கலந்து கொண்ட அவர், "அமெரிக்க டால்ரகளைப் பயன்படுத்தும் அளவிற்கு, இந்திய நாணயமாக ரூபாயையும் பொதுப்புழக்கத்தில் பயன்படுத்தவே விரும்புகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார் அவர். "கிழக்காசிய நாடுகளான சீனா, ஜப்பான் மற்றும் கொரியா ஆகிய நாடுகள் கடந்த 75 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியடைந்திருக்கின்றன. தற்போது இது இந்தியாவின் முறை" எனவும் தெரிவித்திருக்கிறார் ரணில் விக்ரமசிங்க. அவருக்கு முன்பு உரையாற்றிய, இந்திய சிஇஓ மன்றத்தில் தலைவர் TS பிரகாஷ், "இலங்கை இந்திய நாணயமாக ரூபாயின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டிருந்தார். அவரது இந்தக் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே இலங்கையில் ரூபாயின் பயன்பாடு குறித்த மேற்கூறிய கருத்ததைத் தெரிவித்திருக்கிறார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க.