LOADING...
இதுவா ஆபரேஷன் பன்யான் அல்-மார்சஸ்? போட்டோஷாப் அம்பலமானதால் அசிங்கப்பட்டு நிற்கும் பாகிஸ்தான் ராணுவம்
பாகிஸ்தான் ராணுவத்தின் போட்டோஷாப் அம்பலமானது

இதுவா ஆபரேஷன் பன்யான் அல்-மார்சஸ்? போட்டோஷாப் அம்பலமானதால் அசிங்கப்பட்டு நிற்கும் பாகிஸ்தான் ராணுவம்

எழுதியவர் Sekar Chinnappan
May 26, 2025
11:16 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவிற்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக ஒரு போலியான புகைப்படம் பரிசாக வழங்கி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி அசிம் முனீர் ஆகியோர் கடுமையான விமர்சனத்திற்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளனர். "ஆபரேஷன் பன்யான் அல்-மார்சஸ்" என்பதைக் குறிப்பதாகக் கூறப்படும் இந்தப் படம் உண்மையில் 2019 சீன ராணுவப் பயிற்சியின்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இந்த சர்ச்சைக்குரிய பரிசு, கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசீம் முனீர் நடத்திய அதிகாரப்பூர்வ இரவு உணவின் போது ஷெபாஸ் ஷெரீஃப்பால் அசிம் முனீருக்கு வழங்கப்பட்டது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவுடனான சமீபத்திய நான்கு நாள் மோதலில் ஈடுபட்டவர்களைக் கௌரவிக்கும் நோக்கில் இந்த இரவு உணவு வழங்கப்பட்டது.

கேலி

சமூக ஊடகங்களில் கேலி 

சமூக ஊடக பயனர்கள், குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்தவர்கள், படத்தின் தோற்றத்தை விரைவாக அடையாளம் கண்டு, கேலி மற்றும் விமர்சனங்களால் நிரப்பினர். பாகிஸ்தான் தலைமை, தங்கள் சொந்த நடவடிக்கைகளின் உண்மையான காட்சிகளைக் காண்பிப்பதற்குப் பதிலாக, ஃபோட்டோஷாப் மற்றும் கேன்வாவைப் பயன்படுத்தி ராணுவ வரலாற்றை பொய்யாக கட்டமைக்க முயற்சிப்பதாக பயனர்கள் குற்றம் சாட்டினர். "இது பாகிஸ்தானின் சமீபத்திய தலைசிறந்த படைப்பு" என்று ஒரு பயனர் கிண்டலாகக் கருத்து தெரிவித்தார். இதற்கிடையே, இந்திய ராணுவத்தின் பதிலடியைத் தாக்குப்பிடிக்க முடியாமல், நான்கு நாட்களில் சமாதானத்திற்கு பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சினாலும், உள்நாட்டில் தாங்கள் இந்தியாவை வீழ்த்தி விட்டோம் என பொய்யாக கருத்துருவாக்கம் செய்வது இனியும் எடுபடாது என பாகிஸ்தானின் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

வைரலாகும் புகைப்படம்