அடுத்த செய்திக் கட்டுரை

இறுதி சடங்குக்கு பதில் பார்ட்டி வைத்த பாட்டி
எழுதியவர்
Sindhuja SM
Mar 03, 2023
12:31 pm
செய்தி முன்னோட்டம்
டெர்மினல் கேன்சரால் பாதிக்கப்பட்ட 76 வயதான லிண்டா-வில்லியம்ஸ் என்ற பெண்மணி இறுதி சடங்குக்கு பதிலாக பார்ட்டி வைத்து கொண்டாடிய செய்தி தற்போது வைரலாகி இருக்கிறது.
அடிக்கடி மருத்துவமனைக்கு செல்வதும் வருவதுமாக இருந்ததால் மிகவும் சோர்வடைந்த லிண்டா, இறுதி சடங்குக்கு பதிலாக பார்ட்டி வைத்து அசத்தியுள்ளார்.
தன் வாழ்வின் சிறந்த இரவு இது தான் என்று கூறிய அவர், இணையவாசிகள் பலருக்கு ஊக்கத்தை அளித்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள ஹை வைகோம்பைச் சேர்ந்த இவர், இறுதி சடங்குகளை வெறுப்பதாகவும் வாழ்க்கையை அனுபவிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
பார்ட்டி நாள் நெருங்க நெருங்க அவருக்கு உடல் நிலை மோசமாகி கொண்டே இருந்திருக்கிறது.
இருந்தும், கால்களில் பெரிய வீக்கத்துடன் பார்ட்டியில் கலந்து கொண்ட அவர், விடியவிடிய நடனம் ஆடி அசத்தியுள்ளார்.