
இங்கிலாந்தில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர் கைது
செய்தி முன்னோட்டம்
இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம், கடந்த மார்ச் மாதம் காலிஸ்தான் ஆதவாளர்களால் தாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய நபர், கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி அன்று இங்கிலாந்தில் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் நடந்த போராட்டத்தில் அமைதியை சீர்குலைத்ததாக இவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் மீது குற்றம் சாட்டப்படும் வரை அவரது பெயர் வெளியிடப்படாது என ஸ்காட்லாந்து யார்ட் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவருக்கு கடந்த மார்ச் மாதம் இந்திய தூதரகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என இங்கிலாந்து போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும் அவர் தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2nd card
என்ஐஏ அடையாளம் காட்டியவர்களுள் கைது செய்யப்பட்டவரும் ஒருவர்
கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் காலிஸ்தான் ஆதவாளர்களால் தாக்கப்பட்டு, இந்திய கொடியை கீழிறக்க முயற்சிக்கப்பட்டது.
தற்போது கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த நபர் மார்ச் 19ஆம் தேதி நடந்த கலவரத்தில் ஈடுபட்டவராக தேசிய புலனாய்வு முகமையால்(என்ஐஏ) குற்றம் சாட்டப்பட்டவராக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
மார்ச் 19ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்தில் தூதரகத்தில் இருந்த ஒரு அதிகாரி காயமடைந்தார். மேலும் இந்திய தூதரகத்தில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.