LOADING...
கத்தார் எல்என்ஜி எரிவாயு ஆலை வெடிப்பு: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை
கத்தார் LNG எரிவாயு ஆலை வெடிவிபத்தில் 54 பேர் படுகாயம்

கத்தார் எல்என்ஜி எரிவாயு ஆலை வெடிப்பு: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

எழுதியவர் Venkatalakshmi V
Jun 22, 2026
11:36 am

செய்தி முன்னோட்டம்

கத்தாரின் முக்கிய LNG சுத்திகரிப்பு வளாகமான ராஸ் லஃப்பானில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 54 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், இந்த விபத்திற்குப் பிறகு ஆலையில் பணியாற்றிய 14 ஊழியர்கள் உள்ளிட்ட 18 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கத்தார் நாட்டு உள்துறை அமைச்சகம் எக்ஸ் (X) தளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த உள் வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து

பர்சான் எரிவாயு ஆலையில் விபத்து

கத்தார் எனர்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஸ் லஃப்பான் தொழிற்பேட்டையில் உள்ள பர்சான் உள்ளூர் எரிவாயு விநியோக ஆலையில், செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த விபத்து நேரிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. அவசரக்கால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்பொழுது தீயைக் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த விபத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களின் முழு விபரம் இன்னும் துல்லியமாகக் கணக்கிடப்படவில்லை. உலகில் இயற்கை எரிவாயு உற்பத்தியில் முன்னணியில் உள்ள கத்தாரின் இந்த முக்கிய ஆலையில் ஏற்பட்டுள்ள விபத்து, ஏற்கனவே தட்டுப்பாட்டில் இருக்கும் உலகளாவிய எரிசக்தி சந்தையில் மேலும் விலை உயர்வை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

Advertisement