 
                                                                                பிரிட்டிஷ் மன்னர் சார்லஸின் உத்தரவு: இளவரசர் ஆண்ட்ரூவின் அனைத்துப் பட்டங்கள், மரியாதைகள் நீக்கம்
செய்தி முன்னோட்டம்
பிரிட்டனின் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து அரச பட்டங்கள் மற்றும் மரியாதைகள் நீக்கப்பட்டுள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் அவருக்கு தொடர்புகள் இருப்பதாக வெளியான குற்றச்சாட்டின் காரணமாக, மன்னர் சார்லஸ் III-ன் உத்தரவின் பேரில் நீக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை வியாழக்கிழமை (அக்டோபர் 30) அன்று அறிவித்துள்ளது. ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோரின் மூன்றாவது குழந்தை மற்றும் இரண்டாவது மகனான 65 வயதுடைய ஆண்ட்ரூ, இந்தச் சர்ச்சை காரணமாகத் தொடர்ந்து நெருக்கடியில் இருந்து வந்தார். சமீபத்தில் டியூக் ஆஃப் யார்க் என்ற பட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது அனைத்துப் பட்டங்களும் நீக்கப்பட்டுள்ளன.
மறுப்பு
குற்றச்சாட்டுக்கு மறுப்பு
அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், இளவரசர் ஆண்ட்ரூ இனிமேல் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என்ற பெயரில் மட்டுமே அறியப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னர் சார்லஸ், ஆண்ட்ரூவின் நிலை, பட்டங்கள் மற்றும் மரியாதைகளை நீக்குவதற்கான அதிகாரப்பூர்வ செயல்முறையைத் தொடங்கியுள்ளார். அவர் குடியிருக்கும் ராயல் லாட்ஜ் குத்தகை உரிமையையும் ஒப்படைக்க வேண்டும் என்றும், அவர் மாற்று தனியார் தங்குமிடத்திற்கு மாற்றப்படுவார் என்றும் அந்த அறிக்கை கூறியது. ஆண்ட்ரூ தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வந்தாலும், இந்த நடவடிக்கை நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவையானது எனக் கருதுவதாக அரண்மனை தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.