LOADING...
அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு டிரம்ப்பின் 'கிறிஸ்துமஸ் பரிசு': $1,776 ஊக்கத்தொகை அறிவிப்பு
அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு டிரம்ப்பின் 'கிறிஸ்துமஸ் பரிசு'

அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு டிரம்ப்பின் 'கிறிஸ்துமஸ் பரிசு': $1,776 ஊக்கத்தொகை அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Dec 18, 2025
09:47 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு "வாரியர் டிவிடெண்ட்" (Warrior Dividend) என்ற பெயரில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பின்படி, தகுதியுள்ள ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் $1,776 (சுமார் ₹1.48 லட்சம்) வழங்கப்படும். அமெரிக்கா சுதந்திரம் பெற்ற ஆண்டான 1776-ஐ நினைவுகூரும் வகையில் இந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு அமெரிக்கா தனது 250-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் சுமார் 14.5 லட்சம் வீரர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். இந்த தொகை வரும் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னதாகவே வீரர்களின் வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

தகுதி

யாருக்கெல்லாம் தகுதி?

தற்போது பணியில் இருக்கும்(Active-duty) மற்றும் ரிசர்வ் படை வீரர்கள்(Reserve service members) ஆகியோருக்கு இது வழங்கப்படும். நவம்பர் 30, 2025 நிலவரப்படி குறைந்தது 31 நாட்கள் பணியில் இருந்திருக்க வேண்டும். O-6 மற்றும் அதற்குக் கீழ் உள்ள பதவிகளில் இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை உண்டு. ஓய்வுபெற்ற வீரர்களுக்கு (Veterans) இந்தத் திட்டம் பொருந்தாது. தனது உரையில் டிரம்ப், "இது நம் தேசத்தின் வீரர்களுக்குச் செய்யும் கௌரவம்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவின் பொருளாதார நிலையை மேம்படுத்த வரி குறைப்பு மற்றும் எரிபொருள் விலை குறைப்பு போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement