
பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்காததற்கு காரணம் கூறியது பாகிஸ்தான்
செய்தி முன்னோட்டம்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசாங்கம் அமைதியை பேணும் என்றும் நீண்டகால காஷ்மீர் பிரச்சனையை தீர்க்கும் என்றும் பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம்(FO) நேற்று நம்பிக்கை தெரிவித்தது.
அமைதி மற்றும் உரையாடல் முன்னேற்றத்திற்கு உகந்த சூழலை உருவாக்க இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்று பாகிஸ்தான் நம்புவதாக FO செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் சஹ்ரா பலோச் கூறியுள்ளார்.
எனினும், நரேந்திர மோடியின் தேர்தல் வெற்றிக்கு பாகிஸ்தான் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று எழுந்த சர்ச்சை குறித்து பேசிய அவர், புதிய நிர்வாகம் இன்னும் பதவியேற்காததால் "முன்கூட்டியே" எதுவும் சொல்ல வேண்டாம் என்று பாகிஸ்தான் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான்
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து பேசிய பாகிஸ்தான்
"தங்களது தலைமையை தேர்ந்தெடுக்க இந்திய மக்களுக்கு உரிமை உள்ளது. அவர்களின் தேர்தல் செயல்முறை குறித்து நாங்கள் கருத்து சொல்ல விரும்பவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், 2014ல் மோடி பதவியேற்றதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் சரிவு ஏற்பட்டுள்ளதை அவர் ஒப்புக்கொண்ட அவர், 2019 ஆம் ஆண்டில் ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீரின் சுயாட்சி அந்தஸ்தை திரும்பப் பெறுவதற்கான மத்திய அரசின் நடவடிக்கையை குறிப்பிட்டு பேசினார்.
இது இருதரப்பு சூழலுக்கும் தீங்கு விளைவிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா விரோதப் பேச்சுக்களை பேசி வந்த போதிலும், பாகிஸ்தான் தொடர்ந்து பொறுப்பான பதிலை அளித்து வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.