LOADING...
வெனிசுலா நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையே பிரசவம்: தாயும் குழந்தையும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அதிசயம்!
வெனிசுலா நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையே பிரசவம்

வெனிசுலா நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையே பிரசவம்: தாயும் குழந்தையும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அதிசயம்!

எழுதியவர் Sekar Chinnappan
Jun 26, 2026
05:38 pm

செய்தி முன்னோட்டம்

வெனிசுலா நாட்டில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தின் பேரழிவுகளுக்கு இடையே, மனிதநேயத்தையும் நம்பிக்கையையும் துளிர்க்க செய்யும் ஒரு அற்புதாமான உண்மை சம்பவம் தலைநகர் கராகஸ் பகுதியில் நிகழ்ந்துள்ளது. நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த பல அடுக்குமாடி கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண், அந்த இக்கட்டான மரணப் போராட்டத்திற்கு நடுவே குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். கட்டிட சிமெண்ட் சிலாபுகள் மற்றும் கான்கிரீட் குவியல்களுக்கு அடியில் சிக்கியிருந்த நிலையிலும், தாயும் சேயும் எவ்வித ஆபத்துமின்றி உயிருடன் மீட்கப்பட்டுள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரசவ வலி

இடிபாடுகளுக்கு நடுவே பிரசவ வலி

தலைநகர் கராகஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ள மனிதர்களைத் தேடும் பணியில் ராணுவத்தினரும் உள்ளூர் பொதுமக்களும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தொடர்ச்சியான நில அதிர்வுகள் மற்றும் உள்கட்டமைப்புச் சரிவுகளுக்கு இடையே, ஒரு குறிப்பிட்ட இடிபாட்டுக் குவியலின் அடியில் இருந்து ஒரு பெண்ணின் சத்தம் கேட்டு மீட்புக் குழுவினர் அங்கு விரைந்தனர். அப்போது, அங்கு கான்கிரீட் கம்பிகளுக்கு இடையே சிக்கியிருந்த அந்தப் பெண்ணிற்குத் திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுப் போராடிக் கொண்டிருப்பது தெரியவந்தது.

மருத்துவர்கள்

ஆபத்தான சூழலில் கை கொடுத்த தற்காலிக மருத்துவர்கள்

கனரக இயந்திரங்கள் மூலமாகக் கட்டிட இடிபாடுகளை முழுமையாக அகற்றி அந்தப் பெண்ணை வெளியே எடுப்பதற்கு இன்னும் பல மணி நேரம் ஆகும் என்ற சூழல் நிலவியது. இதனால், தாமதிக்காமல் இடிபாடுகளுக்கு உள்ளேயே தற்காலிக மருத்துவக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் நுழைந்து, அந்தப் பெண்ணிற்குப் பிரசவம் பார்க்கும் அதீத முயற்சியில் இறங்கினர். கடுமையான இருள், புழுதி மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவிய அந்த சிறிய இடைவெளியில், அனைவரின் கூட்டு முயற்சியால் அந்தப் பெண்ணிற்கு வெற்றிகரமாகப் பிரசவம் நடந்து குழந்தை பிறந்தது.

Advertisement

வீடியோ

சமூக வலைதளங்களில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே, தாயும் குழந்தையும் மிகவும் பாதுகாப்பாகவும் நிதானமாகவும் இடிபாடுகளிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டு, அங்குத் தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் இருவரும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நெகிழ்ச்சியான மீட்புப் பணியின் புகைப்படங்களும், வீடியோக்களும் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் உலகளவில் வைரலாகி வருவதுடன், அந்தத் தாயின் தைரியத்தையும் மீட்புக் குழுவினரின் அர்ப்பணிப்பையும் லட்சக்கணக்கான மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement