Page Loader
'அரசியல் போராட்டம் தொடரும்' - துவாரகா பிரபாகரன் உரை 
'அரசியல் போராட்டம் தொடரும்' - துவாரகா பிரபாகரன் உரை

'அரசியல் போராட்டம் தொடரும்' - துவாரகா பிரபாகரன் உரை 

எழுதியவர் Nivetha P
Nov 27, 2023
08:16 pm

செய்தி முன்னோட்டம்

விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரன் 2009ம்.,ஆண்டு நடந்த இலங்கை ஈழப்போரின் இறுதிக்கட்ட போர் களத்தில் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் 'பிரபாகரன் உயிருடன் உள்ளார்'என்றும், 'அவரது மகள் துவாரகா இன்று(நவ.,27)மாலை காணொளி மூலம் உரையாற்றவுள்ளார்'என்றும் இயக்குனர் கௌதமன் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தார். அதன்படி அவரது மகளான துவாரகா பிரபாகரன் என்னும் பெயரில் ஒரு பெண்மணி யூடியூப் சேனலில் தோன்றி உரையாற்றியுள்ளார். 10 நிமிடங்கள் கொண்ட இந்த உரையில் பேசிய அவர், ஈழத்திற்கான அரசியல் போராட்டம் தொடரும் என்றும், இப்போராட்டத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் உறுதுணையாக இருக்கும் என்று நம்புவதாகவும் பேசியுள்ளார். இதற்கிடையே இவ்வீடியோவில் பேசுவது துவாரகா பிரபாகரன் இல்லையென்றும், ஏஐ.,தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோப்பதிவு என்றும் ஒருசில அமைப்புகள் கூறி வருகிறார்கள்.

ட்விட்டர் அஞ்சல்

வைரல் வீடியோ பதிவு