Page Loader
பிரான்ஸ் பயணம் முடித்துவிட்டு அபுதாபி சென்றார் பிரதமர் மோடி 
இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விரிவான மூலோபாய கூட்டாண்மை சீராக வலுவடைந்து வருகிறது

பிரான்ஸ் பயணம் முடித்துவிட்டு அபுதாபி சென்றார் பிரதமர் மோடி 

எழுதியவர் Sindhuja SM
Jul 15, 2023
01:23 pm

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு இன்று(ஜூலை 15) சென்றடைந்தார். இன்று, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பிரதமர் மோடி விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சந்திப்பின் போது, ​​எரிசக்தி, உணவு மற்றும் பாதுகாப்பு ஆகிய முக்கிய துறைகளில் இரு நாடுகளும் இருதரப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்ல இருக்கின்றன. பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இறங்கியதும் அந்நாட்டின் அதிபர் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவரை வரவேற்றார்.

சுய

பிரான்சின் உயரிய சிவிலியன் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது 

இந்த பயணம் குறித்து விளக்கம் அளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், "இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விரிவான மூலோபாய கூட்டாண்மை சீராக வலுவடைந்து வருகிறது. மேலும் பல்வேறு களங்களில் இதை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகளை அடையாளம் காண பிரதமரின் இந்த பயணம் ஒரு வாய்ப்பாக இருக்கும். ஆற்றல், கல்வி, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, ஃபின்டெக், பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதிப்பார்கள்" என்று ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. பிரான்ஸ் பயணத்தின் போது, பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன் பரந்த அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தினார். மேலும் பிரான்சின் உயரிய சிவிலியன் மற்றும் இராணுவ கௌரவமான 'கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லெஜியன் ஆஃப் ஹானர்' மோடிக்கு வழங்கப்பட்டது.