LOADING...
ஜி20 உச்சி மாநாடு: தென்னாப்பிரிக்காவில் இருந்து தமிழில் ட்வீட் செய்த மோடி; பின்னணி என்ன?
தென்னாப்பிரிக்காவில் இருந்து தமிழில் ட்வீட் செய்த மோடி

ஜி20 உச்சி மாநாடு: தென்னாப்பிரிக்காவில் இருந்து தமிழில் ட்வீட் செய்த மோடி; பின்னணி என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Nov 22, 2025
01:02 pm

செய்தி முன்னோட்டம்

ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்கச் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள இந்திய வம்சாவளியினரின் கலாசார நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்ததுடன், அவர்களின் உணர்வுகளைப் பாராட்டித் தமிழில் ட்வீட் செய்துள்ளார். இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு கணபதி பிரார்த்தனை மற்றும் சாந்தி மந்திரத்துடன் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் வெளியிட்ட பதிவில், ஜொகன்னஸ்பர்கில் தென்னாப்பிரிக்காவின் கிர்மிட்டியா பாடலுடன் 'கங்கா மையா' நிகழ்ச்சியைக் கண்டது தனக்கு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் தந்ததாக தெரிவித்துள்ளார். இந்தப் பாடலின் மற்றொரு சிறப்பம்சம், அது தமிழில் பாடப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

இந்தியா

தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள்

பல ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவுக்கு வந்த இந்தியர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும், துன்பங்களின் மத்தியிலும் அவர்கள் இந்தியாவைத் தங்கள் இதயங்களில் உயிர்ப்புடன் வைத்திருந்த மனப்பான்மையும் இந்தப் பாடலில் வெளிப்படுகிறது என்று பிரதமர் மோடி பாராட்டினார். இந்த வலுவான கலாச்சாரத் தொடர்பு இன்றும் உயிரோட்டமாக இருப்பது மெச்சத்தக்கது என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்தார். முன்னதாக, மற்றொரு பதிவில், ஜோகன்னஸ்பர்க்கில் இந்தியச் சமூகம் அளித்த அன்பான வரவேற்பால் தாம் நெகிழ்ந்துபோனதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, இந்த பாசம் இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான நீடித்த பிணைப்பைப் பிரதிபலிக்கிறது என்றும், வரலாற்றில் வேரூன்றி, பகிரப்பட்ட மதிப்புகளால் வலுப்படுத்தப்பட்ட இந்த உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.