LOADING...
ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி; மன்னர் இரண்டாம் அப்துல்லா நேரில் வரவேற்பு
ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி

ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி; மன்னர் இரண்டாம் அப்துல்லா நேரில் வரவேற்பு

எழுதியவர் Sekar Chinnappan
Dec 15, 2025
09:00 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜோர்டான் நாட்டுக்கு அதிகாரப்பூர்வப் பயணமாகச் சென்றடைந்தார். தலைநகர் அம்மான் நகரில் உள்ள விமான நிலையத்தில் அவருக்குச் சிறப்பான மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவைப் பலப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணம் அமைந்துள்ளது. பிரதமர் மோடியை வரவேற்க ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா விமான நிலையத்திற்கு நேரடியாக வந்திருந்தது, இரு நாடுகளுக்கும் இடையேயான நெருங்கிய உறவைக் குறிக்கிறது. விமான நிலையத்தில் மன்னரால் அன்புடன் வரவேற்கப்பட்டப் பிரதமர் மோடி, பின்னர் ஜோர்டான் நாட்டின் அரசவைப் பாதுகாப்பில் அணிவகுத்து நின்ற வீரர்களின் மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். இந்த விஜயத்தின்போது, பிரதமர் மோடி மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement