Page Loader
பிரதமர் மோடி பங்கேற்க இருக்கும் பாஸ்டில் தின அணிவகுப்பின் சிறப்புகள்
ஜூலை 14ஆம் தேதி பிரெஞ்சு தேசிய தினமாக கொண்டப்படுகிறது.

பிரதமர் மோடி பங்கேற்க இருக்கும் பாஸ்டில் தின அணிவகுப்பின் சிறப்புகள்

எழுதியவர் Sindhuja SM
Jul 13, 2023
07:12 pm

செய்தி முன்னோட்டம்

இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றிருக்கும் பிரதமர் மோடியை இன்று(ஜூலை 13) பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் வரவேற்றார். பாஸ்டில் தின அணிவகுப்பில் கௌரவ விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து, பிரதமர் மோடி ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பிரான்ஸில் பயணம் மேற்கொள்கிறார். வெள்ளிக்கிழமை(பிரான்ஸ் நேரப்படி) பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கும் வருடாந்திர பாஸ்டில் தின அணிவகுப்பில், 269 பேர் கொண்ட இந்திய முப்படை வீரர்களும் பங்கேற்க இருக்கின்றனர். மேலும், இந்த நிகழ்வில் இந்திய விமானப்படையின்(IAF) மூன்று ரஃபேல் போர் விமானங்கள் பிரஞ்சு ஜெட் விமானங்களுடன் இணைந்து பறக்க இருக்கிறது.

கிவ்உய்

பிரான்ஸின் பாஸ்டில் தினம் என்றால் என்ன?

பிரெஞ்சு தேசம், மன்னர் ஆட்சிக்கு கீழ் இருந்த போது சிறைச்சாலையாக இயங்கி வந்த இடத்திற்கு பெயர் தான் 'பாஸ்டில்' கோட்டை. அப்போது, மன்னர் ஆட்சியை எதிர்த்து யார் கேள்வி கேட்டாலும் அவர்கள் இந்த சிறையில் தான் அடைக்கப்பட்டனர். பிரிட்டிஷ் ஆட்சிக்கு பிறகு இந்தியா ஜனநாயகமாக மாறியது. ஆனால், பிரான்ஸ் நாடு ஜனநாயகமாக மாறுவதற்கு, அந்நாட்டு மக்களே முன்வந்து ஒரு ஜனநாயக புரட்சியை ஆரம்பித்தனர். அதுதான், பிரெஞ்சு புரட்சி என்று அழைக்கப்படுகிறது. முதன்முதலில், ஜூலை-14, 1789இல் 'பாஸ்டில்' கோட்டையில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் விமர்சகர்களை வெளியிடக் கோரி பிரெஞ்சு மக்கள் 'பாஸ்டில்' கோட்டையின் மீது தாக்குதல் நடத்தினர். இதுவே, பிரெஞ்சு புரட்சியின் தொடக்க நாளாகும். எனவேதான், ஜூலை 14ஆம் தேதி பிரெஞ்சு தேசிய தினமாக கொண்டப்படுகிறது.