காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது நேற்று திங்கட்கிழமை இரவு பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை 400-ஆக அதிகரித்துள்ளது என ஆப்கானிஸ்தான் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத் தெரிவித்துள்ளார். சுமார் 2,000 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையின் பெரும் பகுதி இத்தாக்குதலில் தரைமட்டமானது. இதில் 400 பேர் உயிரிழந்ததுடன், 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுப்பு
பாகிஸ்தான் மறுப்பு
ஆனால், பாகிஸ்தான் அரசு இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது. தாங்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளையோ அல்லது மருத்துவமனையையோ தாக்கவில்லை என்றும், பயங்கரவாதிகளின் தளங்களை மட்டுமே குறிவைத்துத் தாக்கியதாகவும் பாகிஸ்தான் செய்தித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கண்டனம்
நபி மற்றும் ரஷீத் கான் கண்டனம்
ஆப்கான் கிரிக்கெட் வீரர் முகமது நபி எக்ஸ் (X) தளத்தில் மருத்துவமனை தாக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்து தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார். "ரமலான் மாதத்தின் 28-வது இரவில், சிகிச்சைக்காக வந்த இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனை வாயிலில் தாய்மார்கள் தங்கள் மகன்களின் பெயரைச் சொல்லிக் கதறுவது நெஞ்சை உலுக்குகிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், ரஷீத் கானும் இந்தத் தாக்குதலைக் 'கடுமையான போர்க்குற்றம்' என விமர்சித்துள்ளார்.
மோதல்
எல்லை மோதல் தீவிரம்
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய இந்தப் போர், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே 'நேரடிப் போர்' போன்ற சூழலை உருவாக்கியுள்ளது. எல்லைப் பகுதிகளில் இரு நாட்டு ராணுவத்தினரும் பீரங்கித் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதால், இதுவரை 1,15,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
BREAKING: More videos from tonight's Pakistani airstrikes which hit a drug rehabilitation hospital in Kabul, killing or wounding an unspecified number of people, according to an Afghan Taliban spokesperson.
— Yalda Hakim (@SkyYaldaHakim) March 16, 2026
Pakistan’s government rejects this, claiming they targeted "military… pic.twitter.com/GtRmnicTLW