NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் கூட்டணி முன்னிலை; சுயேச்சைகளுடன் நவாஸ் ஷெரீப் கட்சி பேச்சுவார்த்தை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் கூட்டணி முன்னிலை; சுயேச்சைகளுடன் நவாஸ் ஷெரீப் கட்சி பேச்சுவார்த்தை
    பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் இதுவரை மொத்தம் 57 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

    பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் கூட்டணி முன்னிலை; சுயேச்சைகளுடன் நவாஸ் ஷெரீப் கட்சி பேச்சுவார்த்தை

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 09, 2024
    04:42 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானின் தேசிய தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களில் பெரும்பாலோர் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவுடன், 106 நாடாளுமன்ற இடங்களில் 47 இல் வெற்றி பெற்றனர் என ஜியோ நியூஸ் தெரிவிக்கிறது.

    இதுவரை குறைந்தது 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்)(பிஎம்எல்-என்) கட்சி, சுயேச்சை வேட்பாளர்களுடன் கூட்டணி அமைத்து பெரும்பான்மை அடையலாம். அதனை தொடர்ந்து ஆட்சி அமைக்கலாம்.

    பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் இதுவரை மொத்தம் 57 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆட்சி அமைக்க ஒரு அரசியல் கட்சிக்கு தனிப்பெரும்பான்மையாக 133 இடங்கள் தேவை. முன்னதாக நேற்று, பாகிஸ்தானின் சட்டமன்றத்தில் உள்ள 265 இடங்களில், 264 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

    பாகிஸ்தான்

    முன்னிலை வகிக்கும் இம்ரான் கான்

    இதுவரை குறைந்தது 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்)(பிஎம்எல்-என்), சுயேச்சை வேட்பாளர்களுடன் கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என ஷெரீப்பின் உதவியாளர் இஷாக் தார் வெள்ளிக்கிழமை பரிந்துரைத்ததாக ஜியோ செய்தி வெளியிட்டுள்ளது.

    2013ல் அறுதிப்பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த அக்கட்சி, மற்றொரு வெற்றியை தனதாக்க முனைகிறது.

    மறுபுறம் சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI), மற்றும் கொல்லப்பட்ட தலைவர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) ஆகிய கட்சிகளும் இத்தேர்தலை சந்தித்துள்ளனர்.

    எனினும், பல இடங்களில் இம்ரான் கான் கட்சி வேட்பாளர்கள் முன்னிலை வகிப்பதாகவும் கூறப்படுகிறது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    தேர்தல்
    இம்ரான் கான்

    சமீபத்திய

    பெண்களிடையே அதிகரித்து வரும் தைராய்டு கோளாறுகள்; அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் தைராய்டு
    ஜூன் 2025இல் இந்தியாவில் முன்பதிவைத் தொடங்குகிறது வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனம் மின்சார வாகனம்
    மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்ற தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்
    இந்தியாவில் மே மாத விற்பனையில் 22 சதவீதம் வளர்ச்சி கண்ட டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் டொயோட்டா

    பாகிஸ்தான்

    364 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு பாகிஸ்தான் விற்றதாக தகவல் ரஷ்யா
    ஆப்கானிஸ்தான் எல்லை அருகே பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான்
    பிரபஞ்ச அழகி பட்டம் வென்றார் மிஸ் நிகரகுவா, ஷெய்னிஸ் பலாசியோஸ் சமூக வலைத்தளம்
    ரஜோரி மோதல்- வெடிகுண்டு நிபுணர் உட்பட இரண்டு தீவிரவாதிகள் கொலை, 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் ஜம்மு காஷ்மீர்

    தேர்தல்

    மிசோரம் தேர்தல் முடிவுகள்: ZPM பெரும்பான்மையைக் கடந்து 26 இடங்களில் முன்னிலை  மிசோரம்
    இதுவரை 27 இடங்களில் வெற்றி; மிசோரத்தில் புதிய ஆட்சியை அமைக்க உள்ளது ZPM  மிசோரம்
    சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா ராஜினாமா மிசோரம்
    தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்  தெலுங்கானா

    இம்ரான் கான்

    இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் பாகிஸ்தான்
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான்
    முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கைது  பாகிஸ்தான்
    வீடியோ: இம்ரான் கான் எப்படி கைது செய்யப்பட்டார் பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025