மொராக்கோ நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மத்திய மொராக்கோவில் ஏற்பட்டது.
மராகேஷிலிருந்து தென்மேற்கே 72 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,059 பேர் காயமடைந்தனர்.
ஆறு தசாப்தங்களுக்கு பிறகு, அந்நாட்டில் பதிவாகும் மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும்.
இந்த பயங்கரமான பேரழிவை அடுத்து, மொராக்கோவில் நடைபெறும் மீட்பு பணிகளில் உதவ பல உலக நாடுகளும் உதவி கரம் நீட்டியுள்ளன.
மொராக்கோவின் அண்டை நாடான அல்ஜீரியாவும் தனது உதவி கரத்தை நீட்டியுள்ளது. இந்த இரண்டு நாடுகளும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தங்களது இரு தரப்பு உறவை துண்டித்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
நஜ்த்
மொராக்கோவுக்கு துணை நிற்கும் உலக நாடுகள்
பல தசபதங்களாக அழியாத பகை இருந்தபோதிலும், தனது அண்டை நாடான மொராக்கோவிற்கு மனிதாபிமான உதவியை வழங்க அல்ஜீரியா முன்வந்துள்ளது.
மொராக்கோவின் மருத்துவ மற்றும் அவசர விமானங்கள் பயணிக்க தனது வான்வெளியை திறக்க அல்ஜீரியா முன்வந்துள்ளது.
அல்ஜீரியா மற்றும் மொராக்கோ இடையேயான எல்லை 1994ஆம் ஆண்டு முற்றிலுமாக மூடப்பட்டது. அல்ஜீரியாவின் வான்வெளி 2021 முதல் மூடப்பட்டது.
இது தவிர, துருக்கி, கத்தார், பிரான்ஸ், ஜெர்மனி,இஸ்ரேல், கத்தார், துபாய் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளும் மொராக்கோவிற்கு தற்போது உதவி செய்து வருகின்றன.
இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்த இக்கட்டான நேரத்தில் மொராக்கோவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று கூறியிருந்தார்.