Loading...
4 மணி நேரப் போராட்டம், மீண்டெழுந்த 97 வயது மூதாட்டி! நேபாளத்தை உலுக்கிய வெள்ளத்தில் போராடி மீண்ட கதை
நேபாள வெள்ளத்தில் 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீண்டெழுந்த 97 வயது மூதாட்டி

4 மணி நேரப் போராட்டம், மீண்டெழுந்த 97 வயது மூதாட்டி! நேபாளத்தை உலுக்கிய வெள்ளத்தில் போராடி மீண்ட கதை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 30, 2026
08:41 am

செய்தி முன்னோட்டம்

நேபாள நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், இடிபாடுகளுக்குள் சிக்கிய 97 வயது மூதாட்டி குண மாயா போஹாரா என்பவர் 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். முதியோர் இல்லத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அவரை, ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மீட்புப் படையினர் பத்திரமாக வெளியே மீட்டனர். இந்த இடிபாடுகளில் இருந்து போரில் வென்ற வீரரைப் போல அவர் மீண்டு வந்துள்ளார் என அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

பலி எண்ணிக்கை

650க்கும் மேற்பட்டோர் பலி மற்றும் ஆயிரக்கணக்கானோர் மாயம்

நேபாளத்தில் வீசிய கனமழை மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 650ஐத் தாண்டியுள்ளது.

மேலும் 2,400க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் கட்டிடங்கள் சரிந்து விழுந்ததால், மக்கள் காடுகள் மற்றும் மலைப் பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

திமுரே மற்றும் தோலகா போன்ற எல்லைப் பகுதிகளில் பாயும் வெள்ள நீரில் ஏராளமான வீடுகள் நொடிப் பொழுதில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

நிலநடுக்கம்

நிலநடுக்கம் என நினைத்துத் தப்பிய எல்லைப்பகுதி மக்கள்

நேபாள-திபெத் எல்லையில் அமைந்த திமுரே பகுதியில் தங்கியிருந்த ராஜு புத்தாடோகி என்பவர், நிலச்சரிவு ஏற்பட்ட போது நிலநடுக்கம் என நினைத்து காட்டுப் பகுதிக்கு ஓடி உயிர் தப்பியுள்ளார்.

"காட்டுப் பகுதிக்கு சென்று கீழே பார்த்த போது, சந்தைப் பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதைக் கண்டேன்.

எனக்கு மறுஜென்மம் கிடைத்துள்ளதாகவே உணர்கிறேன்." என அவர் மருத்துவமனையில் இருந்து உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மீட்புப் பணிகள்

ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள் தீவிரம்

வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் நேபாள ராணுவ ஹெலிகாப்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

வெள்ளத்தில் வீடுகள் அடுத்தடுத்து சரிந்து விழுந்த நிலையில், மக்கள் சேறும் சகதியுமாக மாறிய தெருக்களில் ஓடி உயிர் தப்பினர்.

வியாழக்கிழமை காலை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட பிறகே தாங்கள் உயிர் தப்பியதை உணர்ந்ததாகப் பாதிக்கப்பட்ட மக்கள் கூறியுள்ளனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.

ADVERTISEMENT