Loading...
9 நாட்களுக்கு பின் நேபாளச் சுரங்கத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்பு; மேலும் குரல்கள் கேட்ப்பதால் பரபரப்பு
நீர்மின் நிலைய சுரங்கப்பாதையின் ஆழமான பகுதியிலிருந்து மனிதக் குரல்கள் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன

9 நாட்களுக்கு பின் நேபாளச் சுரங்கத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்பு; மேலும் குரல்கள் கேட்ப்பதால் பரபரப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 04, 2026
09:31 am

செய்தி முன்னோட்டம்

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்கு பிறகு, திரிசூலி 3A நீர்மின் நிலைய சுரங்கப்பாதையிலிருந்து 9 நாட்களுக்கு பிறகு இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஆழமான பகுதியில் இருந்து மேலும் மனிதக் குரல்கள் கேட்பதால் எஞ்சியிருப்பவர்களும் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. பேரிடருக்கு பிறகு திரிசூலி 3A பகுதியில் 40பேரும், நாடு முழுவதும் உள்ள 6 நீர்மின் நிலையங்களில் 900க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் காணாமல் போயிருந்தனர். ஆரம்பத்தில் இருந்தே மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ராம் நெவ்பானே, சுரங்கத்தின் உட்பகுதியிலிருந்து குரல்கள் கேட்டதை உறுதிப்படுத்தியிருந்தார். "அஞ்ச வேண்டாம், உங்களை மீட்கிறோம்" என மீட்புக் குழுவினர் கூறியபோது, சுரங்கத்திற்குள்ளிருந்து பதிலளிக்கப்பட்டதை தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணிகள்

தீவிரமடையும் ராணுவத்தின் மீட்புப் பணிகள்

நேபாள ராணுவம் மற்றும் ஆயுதமேந்திய காவல் படையினர் ஹெவி மெஷினரிகள் மற்றும் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி, சுரங்கப்பாதையை அடைத்துள்ள கனரகச் சேறு மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, ரசுவாவில் உள்ள மற்றொரு திட்டமான லாங்டாங் கோலா நீர்மின் நிலையச் சுரங்கப்பாதையின் 150 மீட்டர் ஆழத்திற்குச் சென்று நடத்தப்பட்ட ஆய்வில் இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நேபாளம் முழுவதும் நிலவி வரும் இந்த இயற்கை பேரிடரில் தற்போதைய நிலவரப்படி 1,259 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

மேலும் 5,053 பேர் வரை இன்னும் காணாமல் போயுள்ளனர்.

திரிசூலி பகுதியில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் குடும்பத்தினர், அலைந்து திரிந்து தகவல்களைத் திரட்டி வரும் நிலையில், இந்த இருவரின் மீட்பு அவர்களின் எதிர்பார்ப்பை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.

ADVERTISEMENT