Loading...
வாழும் நாட்டிற்கு உண்மையா இருங்க! நியூயார்க் மேடிசன் சதுக்கத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரை
நியூயார்க் மேடிசன் சதுக்கத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரை

வாழும் நாட்டிற்கு உண்மையா இருங்க! நியூயார்க் மேடிசன் சதுக்கத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 30, 2026
08:33 am

செய்தி முன்னோட்டம்

நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற மேடிசன் சதுக்க மண்டபத்தில் நடைபெற்ற 'அனைவருக்குமான ஒற்றுமை கொண்டாட்டம்' நிகழ்வில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு உரையாற்றினார். அமெரிக்காவில் பன்முகத்தன்மை பற்றிப் பேசப்படுவது போல, இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை பற்றிக் பேசப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், "பாரத மக்களுக்கு இந்த ஒற்றுமையும் பன்முகத்தன்மையும் அவர்களின் டிஎன்ஏவிலேயே இயல்பாகக் கலந்துள்ளது" என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

இந்தியர்கள்

வாழும் கர்மபூமிக்கு இந்தியர்கள் உண்மையாக இருக்க வேண்டும்!

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினரை நோக்கி உரையாற்றிய மோகன் பகவத், "நீங்கள் அமெரிக்காவில் வாழ்கிறீர்கள், அங்கு உழைத்து சம்பாதிக்கிறீர்கள், எனவே நீங்கள் வாழும் கர்மபூமிக்கு (வாழும் நாட்டிற்கு) எப்போதும் உண்மையாக இருக்க வேண்டும்" என்றார்.

உங்கள் பிறந்த தாயகமான பாரதத்திற்கு ஏதேனும் செய்ய நினைத்தால், நீங்கள் வாழும் நாட்டின் கடமைகளை முழுமையாக நிறைவேற்றிய பிறகே அதை செய்ய வேண்டும் என்றும் அவர் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அறிவுறுத்தினார்.

பொருளாசை

நிலையற்ற பொருளாசை உண்மையான மகிழ்ச்சியைத் தராது

பொருள் சார்ந்த இன்பங்களும் செல்வமும் தற்காலிகமானவை என்றும், அவை ஒருபோதும் மனிதனுக்கு நிலையான மனநிறைவைத் தருவதில்லை என்றும் மோகன் பகவத் வலியுறுத்தினார்.

மனிதன் தனது கர்ம வழியில் எவ்வளவு சம்பாதிக்கிறான் என்பது முக்கியமல்ல, பிறருக்கு எவ்வளவு பகிர்ந்தளிக்கிறான் என்பதே மிக முக்கியமானது என்றார்.

மேலும் தனிமனித வளர்ச்சி, சமுதாய மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை ஒன்றாக இணைந்து முன்னேற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ADVERTISEMENT

ஆன்மீகம்

ஆன்மீக விழுமியங்களே மனிதகுலத்தை ஒருங்கிணைக்கும்

உடலமைப்பு, உடை மற்றும் வழிபாட்டு முறைகளில் வேறுபாடுகள் இருந்தாலும், மனிதர்கள் அனைவரும் ஒரே ஆன்மீகப் புள்ளியால் பிணைக்கப்பட்டுள்ளதாக மோகன் பகவத் தெரிவித்தார்.

சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களை மேற்கோள் காட்டிய அவர், ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தனித்துவமான கடமையும் இலக்கும் உள்ளது என்றார்.

மனித சிந்தனைகள் சரியான பாதையில் செல்லும்போது அது இறைநிலையை அடையும் என்றும், அனைத்து உயிர்களையும் ஒன்றாகக் கருதும் உயரிய தத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் முதன்மை கடமை என்றும் கூறித் தனது உரையை முடித்தார்.

ADVERTISEMENT