Page Loader
"இருபெரும் ஜனநாயக நாடுகளை ஒன்றிணைத்தது பிரதமர் மோடியின் வருகை"- ஜில் பைடன் பேச்சு!
பிரதமர் மோடியுடன் ஜோ பிடனின் மனைவி ஜில் பிடன்

"இருபெரும் ஜனநாயக நாடுகளை ஒன்றிணைத்தது பிரதமர் மோடியின் வருகை"- ஜில் பைடன் பேச்சு!

எழுதியவர் Prasanna Venkatesh
Jun 22, 2023
09:44 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. முதலில் நியூயார்க் நகருக்குச் சென்ற பிரதமர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். பல்துறை சார்ந்த நிபுணர்களையும் முக்கிய நபர்களையும் சந்தித்து உரையாடினார். அதனைத் தொடர்ந்து தற்போது வாஷிங்கடன் நகருக்கு வந்தடைந்திருக்கும் பிரதமர் மோடி, ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுடன் விர்ஜினியாவில் உள்ள நேஷனல் சயின்ஸ் பவுண்டேஷனை சுற்றி பார்த்தார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்த தசாப்தத்தை தொழில்நுட்ப தசாப்தமாக மாற்றுதே என்னுடைய குறிக்கோள்" எனத் தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் மோடி

இந்தியாவின் குறிக்கோள்: 

மேலும் பேசி அவர், "இந்தியாவில் இளம் தொழிலதிபர்களை ஊக்குவிக்க 'ஸ்டார் அப் இந்தியா' திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் குறிக்கோள் இந்த தசாப்தத்தை தொழில்நுட்ப தசாப்தமாக மாற்றுவது தான்" எனத் தெரிவித்திருக்கிறார். "அமெரிக்காவில் உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களும், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமும் இருக்கின்றது. இந்தியாவோ அள்ள அள்ள குறையாத இளைஞர் வளத்தைக் கொண்டிருக்கிறது. இந்த இரு நாடுகளும் கைகோர்ப்பது உலகளாவிய உள்ளடக்கிய வளர்ச்சியைக் கொண்டு வரும்" எனவும் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. "பிரதமர் மோடியின் வருகை உலகின் பழைமையான மற்றும் பெரிய இரு ஜனநாயக நாடுகளை ஒன்றினைத்திருக்கிறது", என மோடியின் வருகை குறித்துப் பேசியிருக்கிறார் ஜில் பைடன். பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்திற்குப் பிறகு இரு நாடுகளும் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.