ஸ்பெஷல் பரிசு ஒன்றை தோனி மகளுக்கு அனுப்பிய கால்பந்து விளையாட்டு வீரர் மெஸ்ஸி-வைரலாகும் புகைப்படம்
கால்பந்தாட்ட விளையாட்டின் நட்சத்திர வீரர்களுள் ஒருவர் மெஸ்ஸி. இவர் தனது கையொப்பமிட்ட அர்ஜென்டினா ஜெர்ஸியை தோனி மகளான ஸிவா'விற்கு ஆசையாக அனுப்பியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான மஹேந்திர சிங் தோனி அவர்கள் கிரிக்கெட்டில் எந்தளவு நாட்டம் உள்ளவரோ, அதேயளவு கால்பந்து விளையாட்டின் மீதும் பெரும் ஆர்வம் உள்ளவர். கிரிக்கெட் விளையாட்டின் பயிற்சிக்கு முன்னர், தோனி கால்பந்தாட்ட விளையாட்டின் பயிற்சியை மேற்கொண்டார் என்று கூறப்படுகிறது. கால்பந்தாட்டத்தில் கோல் கீப்பராக ஆக வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்துள்ளது. கிரிக்கெட்டிற்கு வந்த பிறகும் அவர் அவ்வபோது, கால்பந்து விளையாடுவது, கால்பந்தாட்டங்களை நேரில் சென்று பார்ப்பது என அதன் மீதான தனது ஈர்ப்பினை இழக்காமல் இருந்து வருகிறார்.
தோனியின் மகள் ஸிவா, மெஸ்ஸியின் தீவிர ரசிகர்
சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட, தனக்கு பிடித்த கால்பந்தாட்ட வீரர்கள் ஜிடேன், மெஸ்ஸி என்று கூறினார். அதே போல், தோனியின் மகளான ஸிவா சிங் தோனியும் மெஸ்ஸியின் தீவிர ரசிகராவார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த FIFA உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தை அர்ஜென்டினா வென்றது. கத்தாரில் நடந்த அந்த உலகக்கோப்பைக்கான ஆட்டத்தை காணவும் தோனி சென்றிருந்தார். இதனையடுத்து அணியின் கேப்டனான மெஸ்ஸி, தனது ஜெர்ஸியில் 'பாரா ஸிவா' என்று எழுதி கையொப்பமிட்டு தோனியின் மகளுக்கு பரிசாக அளித்துள்ளார். ஸிவா அந்த ஜெர்ஸியை அணிந்து தனது இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியுடன் புகைப்படம் ஒன்றினை பதிவு செய்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது,