Page Loader
சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் காலமானார்
சீனா அதிபர் அதிபர் ஜி ஜின்பிங்(வலது), உடன் சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங்(இடது)

சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் காலமானார்

எழுதியவர் Srinath r
Oct 27, 2023
10:14 am

செய்தி முன்னோட்டம்

சீனாவின் எதிர்கால தலைவர் என சொல்லப்பட்டவரும், சீன முன்னாள் பிரதமருமான லீ கெகியாங்,68, நள்ளிரவில் மாரடைப்பால் காலமானார். கடந்த 2013 ஆம் ஆண்டு பிரதமர் பதவியேற்ற லீ, அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்கான பணிகளை செய்ததற்காக அறியப்படுகிறார். மருத்துவர்கள் அவரை காப்பாற்ற மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் தாண்டி அவர் உயிர் பிரிந்ததாக, அந்நாட்டின் தேசிய ஊடகமான சிசிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் ஓய்வு பெறும் வரை சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில், அதிபர் ஜி ஜின்பிங்குக்கு அடுத்தபடியாக, அதிகாரமிக்க நபராக லீ வலம்வந்தார். மேலும் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முடிந்த அவரது பிரதமர் பதவி காலத்தில், அதிபர் ஜியின் விசுவாசிகள் குழுவில் இல்லாமல் பதவியில் இருந்த ஒரே நபர் லீ கெகியாங் தான்.

ட்விட்டர் அஞ்சல்

லீ-இன் திடீர் மரணம் சீனாவில் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது