NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / குவைத் கட்டிட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 15,000 டாலர்கள் நிவாரணம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    குவைத் கட்டிட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 15,000 டாலர்கள் நிவாரணம் 

    குவைத் கட்டிட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 15,000 டாலர்கள் நிவாரணம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 19, 2024
    10:57 am

    செய்தி முன்னோட்டம்

    குவைத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்தனர்.

    அந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு குவைத் அரசாங்கம் USD 15,000(சுமார் ரூ. 12.50 லட்சம்) இழப்பீடாக வழங்க உள்ளது.

    கடந்த ஜூன் 12 ஆம் தேதி, தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் பகுதியில் இருக்கும் ஏழு மாடி கட்டிடத்தில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள காவலர் அறையில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது.

    சம்பவத்தின் போது அந்த கட்டிடத்தில் 196 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர்.

    குவைத்

    இழப்பீட்டு தொகை தூதரகங்களுக்கு அனுப்பப்படும்

    இந்நிலையில், குவைத் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இழப்பீட்டுத் தொகைகள் செயலாக்கப்பட்டு, உயிரிழந்தவர்களுடைய நாட்டை சேர்ந்த அந்தந்த தூதரகங்களுக்கு அனுப்பப்படும் என்று குவைத் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவதை சம்பந்தப்பட்ட தூதரகங்கள் உறுதி செய்யும் என்றும், அந்த குடும்பங்களுக்கு உடனடியாக உதவிகள் சென்றடைவதும் உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இக்கட்டான காலங்களில் உயிரிழந்த குடும்பங்களை ஆதரிப்பதற்காக இந்த இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

    கடந்த ஜூன் 13ஆம் தேதி, உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்கள் இந்திய விமானப்படையின் விமானம் மூலம் கேரளாவின் கொச்சிக்கு கொண்டுவரப்பட்டன. அதன் பிறகு அந்த உடல்கள் பாதிக்கப்பட்டவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குவைத்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை

    குவைத்

    குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து: 40 இந்தியர்கள் பலி, 30 பேர் காயம் உலகம்
    குவைத்தில் கட்டிட தீ விபத்தில் 40 மேற்பட்ட இந்தியர்கள் பலி; உடல்களை இந்தியா எடுத்துவர நடவடிக்கை தீ விபத்து
    குவைத் தீவிபத்தில் இறந்த 45 இந்தியர்களின் உடல்களுடன் கேரளாவிற்கு புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம் தீ விபத்து

    உலகம்

    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவை தொடர்ந்து, முகமது மொக்பர் பதவியேற்க உள்ளார் ஈரான்
    2000 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டது ஈரான் அதிபரின் உடல்: உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்  ஈரான்
    ஈரான் அதிபரின் உயிரிழப்பை அடுத்து நாளை துக்க நாளாக அனுசரிக்கப்படும் என அறிவித்தது இந்தியா ஈரான்
    ஈரான் அதிபரின் மரணத்தில் எங்களுக்கு தொடர்பு இல்லை: இஸ்ரேல்  இஸ்ரேல்

    உலக செய்திகள்

    ஜார்ஜியாவில் கார் கவிழ்ந்ததால் 3 இந்திய-அமெரிக்க மாணவர்கள் பலி ஜார்ஜியா
    நடு வானில் ஆட்டம் கண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ஒருவர் பலி, பலர் காயம்  தாய்லாந்து
    வீடியோ: 5 நிமிடங்களில் 6,000 அடி சரிந்ததால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான பயணிகள் மத்தியில் பதட்டம்  லண்டன்
    பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க உள்ளது நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து நார்வே
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025