Page Loader
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டார், அரசியலில் இருந்து விலகக்கூடும்: தகவல்
ஆற்றல் மிக்க தலைவராகக் கொண்டாடப்பட்ட ட்ரூடோவின் வாழ்க்கையின் ஆச்சரியமான முடிவு இது!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டார், அரசியலில் இருந்து விலகக்கூடும்: தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 16, 2025
05:48 pm

செய்தி முன்னோட்டம்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அனைத்து தரப்பிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கனடாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். ஒரு தசாப்தத்திற்கு முன்பு, இளம், ஆற்றல் மிக்க தலைவராகக் கொண்டாடப்பட்ட ட்ரூடோவின் வாழ்க்கையின் ஆச்சரியமான முடிவு இது. "எனது சொந்த முடிவுகளின் அடிப்படையில், நான் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" என்று ட்ரூடோ புதன்கிழமை கூறியதாக கனடாவின் குளோபல் நியூஸ் மேற்கோளிட்டுள்ளது. செய்தியாளர் சந்திப்பில்,"பின்னர் நான் என்ன செய்வேன் என்பதைப் பொறுத்தவரை, அதைப் பற்றி சிந்திக்க எனக்கு அதிக நேரம் இல்லை, கனடியர்கள் என்னைத் தேர்ந்தெடுத்த வேலையை இப்போது அசாதாரணமான முக்கிய நேரத்தில் செய்வதில் நான் முழு கவனம் செலுத்துகிறேன்" என்று ட்ரூடோ கூறினார்.

பதவி விலகல்

பதவியிலிருந்து விளக்கவுள்ளதாக அறிவித்த ட்ரூடோ

கனடாவின் லிபரல் கட்சி தலைவரை தேர்ந்தெடுத்ததை அடுத்து, கனடா பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ட்ரூடோ சமீபத்தில் அறிவித்திருந்தார். ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடத்தப்படும் வரை லிபரல் கட்சியின் தலைவர் பிரதமராக பதவியேற்பார். ட்ரூடோ பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகும், தேர்தல் நடைபெறும் வரை சில மாதங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பார். தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற அவரது முடிவிற்குப் பிறகு, ட்ரூடோ புதிய நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக இருப்பதை நிறுத்துவார். ட்ரூடோவும், லிபரல் கட்சியும் மிகவும் செல்வாக்கற்றதாகிவிட்டதால், அவரது அரசியல் ஓட்டம், பதவி விலகலுடன் முடிவு வருகிறது. குடியேற்றம், பணவீக்கம், வேலைவாய்ப்பு மற்றும் வீட்டுவசதி உள்ளிட்ட பல பிரச்சினைகளில் ட்ரூடோ அரசாங்கம் தங்களை தோல்வியுற செய்ததாக கனடியர்கள் நம்புகிறார்கள்.