
ஜி20 மாநாட்டின் போதே முறுக்கிக்கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ: ஒதுக்கப்பட்ட அறையில் தங்க மறுத்ததாக தகவல்
செய்தி முன்னோட்டம்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜி 20 உச்சி மாநாட்டிற்காக இந்தியாவுக்கு வந்தபோது, அவருக்காக ஒதுக்கப்பட்ட நட்சத்திர ஹோட்டலின் 'ஜனாதிபதி அறை'யில் தங்க மறுத்து, அதே ஹோட்டலில் உள்ள சாதாரண அறையில் தங்கியதாக செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.
பாதுகாப்பு நெறிமுறைகள் படி, ஒவ்வொரு உலகத் தலைவருக்கும், நட்சத்திர விடுதிகளில், சொகுசு அறைகள் ஒதுக்கப்பட்டன.
அதேபோல கனடா பிரதமருக்காக இந்திய பாதுகாப்பு ஏஜென்சிகளால், டெல்லியில் உள்ள லலித் ஹோட்டலில் பிரசிடென்சி சுவீட் எனப்படும் சொகுசு அறை ஒதுக்கப்பட்டது.
செலவைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படுவதாக ஜஸ்டின் ட்ரூடோவின் பிரதிநிதிகள் இந்திய பாதுகாப்பு நிறுவனங்களுக்குத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
card 2
மீண்டும் 'பிகு' பண்ணிய ஜஸ்டின்
இருப்பினும், ட்ரூடோ சாதாரண அறையில் தங்கியதற்கான சரியான காரணம் குறித்து எந்த தகவலும் இல்லை என்று இந்திய ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன.
அதுமட்டுமில்லாமல், பிரதமர் ஜஸ்டின் கனடா புறப்படும் நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக டெல்லியில் தங்க வேண்டிய சூழல் உருவானது. கனேடிய பிரதமர் ட்ரூடோ மற்றும் அவரது தூதுக்குழுவினர் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதை அறிந்ததும், அவர்கள் புறப்பாட்டிற்கு, ஏர் இந்தியா ஒன் விமான சேவையை இந்திய தரப்பு வழங்கியதாக PTI தெரிவிக்கிறது.இறுதியாக, செப்டம்பர் 12 அன்று தன்னால் நாடு விமானம் மூலமாகதான் ட்ரூடோ இந்தியாவை விட்டு கிளம்பினார்.