Page Loader
கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது 
இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்

கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது 

எழுதியவர் Sindhuja SM
Jun 08, 2023
04:19 pm

செய்தி முன்னோட்டம்

போலியான அட்மிஷன் ஆஃபர் லெட்டர்களை சமர்பித்ததாக கூறப்படும் 700 இந்திய மாணவர்கள் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட இருக்கின்றனர். சமீபத்தில், கனடா பார்டர் சர்வீசஸ் ஏஜென்சி(CBSA) 700 இந்திய மாணவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. இந்த மாணவர்களின் அட்மிஷன் ஆஃபர் லெட்டர்கள் போலியானவை என்பதை CBSA அதிகாரிகள் கண்டறிந்த்துள்ளனர். 2018இல் மேற்படிப்பிற்காக கனடா சென்ற இந்த மாணவர்களின் அட்மிஷன் லெட்டர்கள் போலியானவை என்பது 5 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்த மாணவர்கள் கனடாவில் நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பித்தனர். அப்போதுதான் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

details

மாணவர்களை தண்டிப்பது நியாயமற்றது: வெளியுறவுத்துறை அமைச்சர் 

இந்த வெளியேற்றத்துக்கு எதிராக தற்போது இந்திய மாணவர்கள் கனடாவில் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கனடா கல்லூரிகளுக்கு அட்மிஷன் வாங்கி தரும் ஒரு ஏஜென்ட் தங்களை ஏமாற்றிவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். "இந்தப் பிரச்சனை குறித்து கனேடிய அரசாங்கத்திடம் இந்திய அரசாங்கம் பேச வேண்டும். நாங்கள் நிரபராதிகள், நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம். எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. பலர் இதனால் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் உள்ளனர்" என்று போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், "கனடாவில் உள்ள இந்திய மாணவர்கள் வேறொருவரின் குற்றத்திற்காக தண்டிக்கப்படக்கூடாது. மாணவர்கள் நல்ல எண்ணத்துடன் அந்தக் கல்லூரிகளில் சேர்ந்து படித்துள்ளனர். அவர்களை தண்டிப்பது நியாயமற்றது." என்று கூறியுள்ளார்.