வளைகுடா நாடுகளில் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்: உலக பொருளாதாரத்திற்கு புதிய அச்சுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான ராணுவ மோதல், தற்போது உலகளாவிய 'எரிசக்தி போராக' (Oil War) உருவெடுத்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இரு நாடுகளும் பரஸ்பரம் எரிசக்தி நிலையங்களை குறிவைத்துத் தாக்கியுள்ளது உலக நாடுகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 17 வரை ஈரானின் எண்ணெய் உற்பத்தி நிலையங்களை தாக்காமல் தவிர்த்து வந்த இஸ்ரேல், புதனன்று உலகின் மிகப்பெரிய எரிவாயு வயலான 'South Pars' மீது தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஈரான், சவுதி அரேபியாவின் 'அராம்கோ' சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கத்தார், ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிவாயு நிலையங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
பதற்றம்
ஏன் இந்த பதற்றம்?
உலகின் 12 ஆண்டுகால தேவையை பூர்த்தி செய்யக்கூடிய 1,800 டிரில்லியன் கன அடி எரிவாயுவை கொண்டுள்ள தெற்கு பார்ஸ் தளம், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முதுகெலும்பாகக் கருதப்படுகிறது. இத்தாக்குதலால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 110 டாலராக உயர்ந்துள்ளது.
இந்தியா
இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்பு
இந்தியாவின் எல்.பி.ஜி (LPG) தேவையில் 80-85% கத்தார் மற்றும் சவுதி அரேபியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. கத்தாரின் எரிசக்தி நிலையங்கள் பாதிக்கப்படுவது இந்தியாவின் உர உற்பத்தி மற்றும் வீட்டு உபயோக எரிவாயு விநியோகத்தில் பெரும் தட்டுப்பாட்டை உருவாக்கும் என அஞ்சப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள நிலையில், உற்பத்தி நிலையங்கள் மீதான இந்தத் தாக்குதல்கள் சரி செய்யப்பட பல ஆண்டுகள் ஆகலாம் எனப் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த மோதல் ஒரு பிராந்தியப் போராக மட்டுமில்லாமல், உலகப் பொருளாதாரத்தையே முடக்கும் அபாயமாக மாறியுள்ளது.