LOADING...
டிமோனா நகரில் விழுந்த ஈரானிய ஏவுகணை! நடான்ஸ் அணு உலை தாக்குதலுக்குப் பழிவாங்கியதாக ஐஆர்ஜிசி அறிவிப்பு
இஸ்ரேல் அணுசக்தி மையம் அருகே ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு

டிமோனா நகரில் விழுந்த ஈரானிய ஏவுகணை! நடான்ஸ் அணு உலை தாக்குதலுக்குப் பழிவாங்கியதாக ஐஆர்ஜிசி அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 22, 2026
07:52 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் தனது நடான்ஸ் அணு உலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள டிமோனா நகர் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேலின் ரகசிய அணுசக்தி ஆய்வு மையம் அமைந்துள்ள இந்தப் பகுதியில் ஏவுகணை விழுந்து வெடித்ததில் ஒரு சிறுவன் உட்பட 20 பேர் காயமடைந்துள்ளனர். ஈரானின் புரட்சிகர காவல்படை, இந்தத் தாக்குதல் தங்களின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குக் கிடைத்தப் பழிவாங்கல் என்று அறிவித்துள்ளது. சனிக்கிழமை (மார்ச் 21) அதிகாலை ஈரானின் முக்கிய அணுசக்தி மையமான நடான்ஸ் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

வைரலாகும் 32 விநாடி வீடியோ

எக்ஸ் தளத்தில் இந்தத் தாக்குதல் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒரு ஏவுகணை கட்டிடத்தைத் தாக்கும் காட்சியும், அதைத் தொடர்ந்து மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்பதும் பதிவாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இஸ்ரேலிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் டிமோனா பகுதியில் அமைந்துள்ள ஷிமோன் பெரெஸ் நெகேவ் அணு ஆராய்ச்சி மையம், இஸ்ரேலின் அணு ஆயுதக் கிடங்காகக் கருதப்படுகிறது. இருப்பினும், இஸ்ரேல் இதனை ஒரு ஆராய்ச்சி மையம் என்றே உலக நாடுகளுக்குக் கூறி வருகிறது. தற்போது இந்தப் பகுதியே இலக்காக மாற்றப்பட்டுள்ளது போரின் தீவிரத்தை உணர்த்துகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement