இலங்கை அருகே ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல்: விரிவான அறிக்கை
செய்தி முன்னோட்டம்
நேற்று இந்தியப் பெருங்கடலில், இலங்கை கடற்பரப்பிற்கு அருகே ஈரான் நாட்டின் 'IRIS Dena' என்ற போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ (Torpedo) ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடித்தது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று மற்றொரு நாட்டின் கப்பலைத் தாக்கி மூழ்கடிப்பது இதுவே முதல் முறையாகும். இந்திய கடற்படை நடத்திய 'MILAN 2026' பன்னாட்டு கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டு, விசாகப்பட்டினத்திலிருந்து ஈரான் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தக் கப்பல் தாக்கப்பட்டது. மார்ச் 4 அதிகாலை, காலியில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் 'MK-48' ரக டார்பிடோ ஏவுகணை மூலம் இக்கப்பல் தகர்க்கப்பட்டதாக அமெரிக்க ராணுவத் தளபதி ஜெனரல் டான் கெய்ன் உறுதிப்படுத்தியுள்ளார்.
மீட்பு
உயிரிழப்பு மற்றும் மீட்புப் பணி
கப்பலில் இருந்த சுமார் 180 பேரில், இதுவரை 87 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 32 மாலுமிகளை இலங்கை கடற்படை மீட்டு காலி கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதித்துள்ளது. இன்னும் 60-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
எச்சரிக்கை
ஈரானின் எச்சரிக்கை
சர்வதேச கடல் பகுதியில், எந்தவித முன்னறிவிப்புமின்றி இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கண்டனம் தெரிவித்துள்ளார். "கடலில் அமெரிக்கா செய்துள்ள இந்தக் கொடுஞ்செயலுக்காக அந்த நாடு கசப்பான விளைவுகளைச் சந்திக்கும்" என்று அவர் எச்சரித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' (Operation Epic Fury) போர் தற்போது இந்தியப் பெருங்கடல் பகுதிக்கும் விரிவடைந்துள்ளது, உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The U.S. has perpetrated an atrocity at sea, 2,000 miles away from Iran's shores.
— Seyed Abbas Araghchi (@araghchi) March 5, 2026
Frigate Dena, a guest of India's Navy carrying almost 130 sailors, was struck in international waters without warning.
Mark my words: The U.S. will come to bitterly regret precedent it has set. pic.twitter.com/cxYiI9BLUk